சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43 தொலைபேசி : 044-22642561 தொலைநகல் : 044-22642562 கைபேசி : 99406 64343
மின்அஞ்சல்: daseindia@gmail.com,dasetn@yahoo.com
இணையதளம் www.daseindia.org
________________________________________________________________________________
தேதி :22.03.09
திருச்சியில் 22.03.09 அன்று நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 31 அன்று அரசு டாக்டர் களின் ஒருநாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கோரிக்கைகள் தொடர்பாக ஏப்ரல் முதல் வாரத்தில் சங்க நிர்வாகிகளுடன் பேசிட மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஒப்புக்கொண்டதின் அடிப்படையிலும்,நாடாளுமன்றத் தேர்தலையும்,தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதையும் கருத்தில் கொண்டு இவ்வேலைநிறுத்தம் தள்ளிவைக்கப்படுகிறது.தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
2.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக்கட்சி சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கோரிக்கை மாநாட்டை திருச்சி அல்லது சென்னையில் வரும் ஜூன் இறுதிவாரத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
3. தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கும், மொபைல் கிளினிக் மருத்துவர்களுக்கும் உடனடியாக டி.என்.பி.எஸ்.சி சிறப்புத் தேர்வை நடத்தி பணிவரன்முறை வழங்கிட வேண்டும்.
4. ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்து டி.என்.பி.எஸ்.சி சிறப்புத் தேர்வு மூலம் பணிநிரந்தரம் பெற்றுள்ள டாக்டர்களுக்கு ஒப்பந்த அடிப் படையில் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறை வழங்கிட வேண்டும்.
5. மத்திய அரசுக்கு இணையாக தமிழக மருத்துவர்களுக்கு ஊதியம்-பதவி உயர்வு வழங்கிடவேண்டும்.
6. விருப்ப ஓய்வு பெற விரும்பும் மருத்துவர்களுக்கு அதற்கான வாய்ப் பை வழங்கிட வேண்டும்.
7. டாக்டர்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் பணிநியமனம் செய்வதை கை விட்டு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணிநிய மனம் செய்திடவேண்டும்.இதற்கென தனி வாரியம் அமைத்திடவேண்டும்.
8. டி.என்.பி.எஸ்.சி மூலம் பணி அமர்த்தப்பட்டவர்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயிலாம் என்ற விதிமுறையை நீக்கிவிட்டு ,எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டாலும் அவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயில வாய்ப்பளிக்க வேண்டும்.
9. நீலகிரி மாவட்டத்தில் ஓராண்டு சேவை முடித்த உடனேயே அரசு டாக்டர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயில வாய்ப்பளிக்க வேண்டும்.
10. மத்திய-மாநில அரசு மருத்துவர்களுக்கும்,ஈ.எஸ்.ஐ, ரயில்வே உள் ளிட்ட அரசு மற்றும் பொதுத்துறை மருத்துவர்களுக்கும் முதுநிலை மருத்துவக்கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.
11.முதுநிலை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிப்பதோடு, ஆன் -லைன் கவுன்சிலிங் வசதியை ஏற்படுத்திட வேண்டும்.நுழைவுத் தேர்வு முடிந்த உடன் விடைத்தாளின் கார்பன் நகலை தேர்வு எழுதியவருக்கு வழங்குவதோடு, அன்று மாலையே இணைய தளத்தில் சரியான விடைகள் அடங்கிய ஆன்சர் கீ யை (Answer key) வெளியிட வேண்டும்.
12.முதுநிலை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கையில் இவ்வாண்டே அருந்ததியருக்கான உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவேண்டும்.
13.சென்ற ஆண்டு முதுநிலை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கையில் முஸ்லீம்களுகான உள்ஒதுக்கீடு 2.5 விழுக்காடே நடைமுறைப்படுத்தப் பட் டுள்ளதாக கூறப்படுகிறது.எனவே இவ்வாண்டு முழுமையாக 3.5 விழுக்காட்டை வழங்கிட வேண்டும்.
14.முதுநிலை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு உரிமை பெற்ற அரசு டாக்டர்களுக்கு கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 40 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்யவேண்டும்.அரசு டாக்டர்களுக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படும் வரை கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை படிப்படியாக கடந்த காலத்தில் குறைத்ததுபோல்,இப்பொழுது சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் குறைப்பதுபோல் குறைக்க வேண்டும்.
15. இடஒதுக்கீடு உரிமை பெற்ற அனைத்து டாக்டர்களுக்கும் கவுன்சிலிங் கில் கலந்துகொள்வதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 40 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது சமூகநீதிக்கு எதிரானது. எஸ்.சி/.எஸ்.டி மருத்து வர்கள் கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 30 விழுக்காடாக குறைக்கப்பட வேண்டும்.மேலும் ஒரு போட்டித்தேர்வில் கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்
கப்படுவது சரியல்ல.எனவே குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்படு வதை முழுமையாக ரத்துசெய்யவேண்டும்.
16. முதுநிலை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கையில் அரசு டாக்டர் களுக்கு அதிகப்பட்சமாக வழங்கப்படும் சர்வீஸ் மதிப்பெண் 10 மதிப்பெண்hணோடு,எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தப்பிறகு ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு மதிப்பெண்வீதம் அதிகப்பட்சமாக வழங்கப்படும் எக்ஸ்பீரியன்ஸ் மதிப்பெண் 10 மதிப்பெண்ணையும் தனித்தனியாக சென்ற ஆண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் வழங்கியது போல் வழங்க வேண்டும்.
17.பஞ்சாயத் யூனியன் மருத்துவமனைகளில் பணிபுரிந்து அரசு மருத்துவர்களானவர்களுக்கு பஞ்சாயத் யூனியன் மருத்துவமனைகளில் பணியில் சேர்ந்த நாள்முதல் சி.எம்.எல் சீனியாரிட்டி வழங்கிடவேண்டும்.
18. பயிற்சி மருத்துவர்கள் , பட்டய மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களின் பயிற்சி கால ஊதியத்தை உயர்த்திட வேண்டும்.
19. எம்.எம்.சி,கே.எம்.சி, ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவக் கல்லூரி மாண வ- மாணவியரின் விடுதிகளின் வசதியை மேம்படுத்திட வேண்டும்.
20. தாழ்த்தப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் கல்வி-விடுதி-தேர்வுக் கட்ட ணங்களை ரத்து செய்திட வேண்டும்.
21. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் கல்வி-விடுதி-தேர்வுக் கட்டணங்களை அரசே ஏற்க வேண்டும்.
22. மருத்துவ மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் லேப்-டாப் வழங்குவதோடு,மருத்துவக் கல்லூரிகளின் நூல்நிலையங்கள் அனைத்திலும் இன்டர்நெட் வசதி செய்துகொடுத்திட வேண்டும்.
23. நோயாளிகள் நலச்சங்கங்களுக்கு நிதிதிரட்ட டாக்டர்களை கட்டாயப்படுத்துவதை கைவிடவேண்டும்.
24. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ஆம்புலன்ஸ் வழங்குவதோடு மொபைல் கிளினிக் மருத்துவ ஊர்திகளுக்கு நிரந்தர ஓட்டுனர்களையும்,மருத்துவ ஊழியர்களையும் நியமிக்கவேண்டும்.போதிய எரிபொருளையும் வாகனங்களுக்கு வழங்கிட வேண்டும்.
25. இரத்த சேமிப்பு வசதி,ஆம்புலன்ஸ் வசதி போன்ற வசதிகளும், மகப் பேறு-மயக்க மற்றும் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர்களும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இல்லை. அவசர அறுவை சிகிச்சைக்கு வசதிகளற்ற இத்தகு நிலையங்களில் தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்க வேண்டும் என மருத்துவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனால்,பேறுகாலத்தில் தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் இறப்பது அதிகரிக்கிறது.கர்ப்பப்பை கிழிதல்,இறங்கிவிடுதல் போன்ற பாதிப்புகள் அதிகரிக்கின்றன. மூளை-மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.எனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்ப்பதை கட் டாயப்படுத்தும் போக்கை கைவிடவேண்டும்.
26. எல்லா வசதிகளும் உள்ள பாதுகாப்பான மருத்துவமனைகளில் பிரச வம் பார்ப்பதை ஊக்கப்படுத்துவதோடு,பிரசவம் பார்த்துக்கொள்வ தற்கான மருத்துவனைகளை தெரிவு செய்திட தாய்மார்களுக்கு உள்ள உரிமையை பாதுகாத்திட வேண்டும்.
27. தமிழக அரசின் பட்ஜெட்டில் ஆண்டு வறுமானம் 24 ஆயிரத்திற்கும் கீழ் உள்ள 1 கோடி குடும்பங்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை பயனடை யும் மருத்துவக் காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 200 கோடி வரும் ஆண்டில் ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள் ளது. இத்திட்டத்தால் உயிர்காக்கும் உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை படிப்படியாக தனியார் மயமாகிவிடும்.இத்திட்டத்தின் மூலம் சாதாரண மக்கள் 1.5 லட்சத்திற்கு மேல் செலவாகும் இதய அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளை செய்து கொள்ளமுடியாது.தனியார் மருத்துவ மனைகளில் உள்ள அதிகமான கட்டணங்களும், காப்பீட்டு நிறுவனங்கள் போடும் பல்வேறு கட்டுப்பாடுகளும் ஏழை மக்களுக்கு பெரும் தடையாக அமையும். சி.டி.ஸ்கேன்,எம்.ஆர்.ஐ.ஸ்கேன் போன்ற அனைத்துப் பரிசோதனைகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்கள் உதவுவதில்லை. ஏழை மக்களை தனியார் மருத்துவமனைகளை நோக்கி இழுக்கும் தூண்டில் புழுபோல்தான் இத்திட்டம் அமையும்.தனியார் மருத்துவமனைகளும், நலக்காப்பீட்டு நிறுவனங்களுமே இத்திட்டத்தால் லாபமடையும்..நலக்காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் உயிர்காக்கும் உயர் சிறப்பு சிகிச்சைகளுக்கு ஏழை மக்களுக்கு உதவுவதற்குப் பதிலாக அரசே நேரடியாக உதவலாம்.இடைத்தரகர்களின் முறைகேடுகளை இதன் மூலம் தவிர்க்கலாம்.மேலும் ஆண்டுதோறும் இதற்காக செலவழிக்கூடிய நிதியை கொண்டே ஒவ்வொரு ஆண்டும் ஓர் உயர் சிறப்பு மருத்துவ மனையை அரசே தொடங்கிட முடியும்.அதில் இலவசமாக ஏழை மக்களுக்கு சிகிச்சை வழங்கிட முடியும்.ஏற்கனவே இருக்கக்கூடிய மருத்துக்கல்லூரி மருத்துவமனைகளையும் தரம் உயர்த்தலாம்,முழுமையாகப் பயன்படுத்தலாம்.அமைப்புசாரா தொழிலார்களுக்கு அரசே கட்டணம் செலுத்தி ஈ.எஸ்.ஐ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம்.அரசு மருத்துவமனைகளில் சி.டி.ஸ்கேன் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற அனைத்துப் பரிசோதனைகளையும், சிகிச்சைகளையும் இலவசமாக்கலாம். கட்டண வார்டுகளை ரத்து செய்து அந்தப் படுக்கை
களையும் ஏழை நோயாளிகளுக்கு வழங்கலாம் .எனவே இத்திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்திட வேண்டும் .மாற்று யோசனைகளை நடைமுறைப்படுத்திட முன்வர வேண்டும்.
28. இளம் டாக்டர்களின் வேலை வாய்ப்பை பாதிக்கும் கட்டாயச் சேவைத் திட்டத்தை கைவிடவேண்டும் என தமிழக அரசு மத்திய அரசை வற்புறுத்தவேண்டும்.
29. அரசுமருத்துவமனைகளை தனியார் மயமாக்குவதையும் வியாபாரமய மாக்குவதையும் மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழக அரசு வற்புறுத்தவேண்டும்.
30. மூடப்பட்டுள்ள நோய் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் பொதுத் துறை நிறுவனங்களை மத்திய அரசு மீண்டும் திறந்திடவேண்டும் என தமிழக அரசு வற்புறுத்தவேண்டும்.
31. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு (ALL INDIA QUOTA) முறையை ரத்து செய்திட வேண்டும். இம் முறை நீடிக்கும் வரையில் அதில் மத்திய-மாநில அரசு மருத்துவர்களுக்கும், ஈ.எஸ்.ஐ, ரயில்வே மற்றும் பொதுத்துறை மருத்துவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.
32. இலங்கையில் போரை நிறுத்திடவும்,பேச்சுவார்த்தை மூலம் அமைதி வழியில் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு கண்டிடவும் உரிய நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசு மத்திய அரசை வற்புறுத்தவேண்டும்.
33.தமிழினப் படுகொலைக்கு இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு முழுமையாக உதவும் நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு மருத்துவ உதவி வழங்கிடல் என்ற போர்வையில் இலங்கைக்கு இந்திய ராணுவ மருத்துவக்குழுவை அனுப்பியது சரியல்ல.இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.எனவே இராணுவ மருத்துவக்குழுவை உடனடியாக திரும்ப அழைத்திடவேண்டும்.அதற்குப் பதிலாக தமிழக மருத்துவர்களையும் உள்ளடக்கிய சிவில் மருத்துவக்குழுக்களை அனுப்பிட வேண்டும்.
மிக்க நன்றி. இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.யி.