சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43 தொலைபேசி : 044-22642561 தொலைநகல் : 044-22642562 கைபேசி : 99406 64343
மின்அஞ்சல்:daseindia@gmail.com,dasetn@yahoo.com
இணையதளம் www.daseindia.org
________________________________________________________________________________
இதழ்ச் செய்தி
தேதி: 10.03.09
ஊதிய உயர்வு,பணிவரன்முறை கோரி டாக்டர்கள் சங்கம் தொடர் போராட்டம்.
மார்ச்-15 ஆர்ப்பாட்டம்.
மார்ச் -31 ஒருநாள் வேலைநிறுத்தம்.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.
தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கும், மொபைல் கிளினிக்குகளில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கும், உடனடியாக டி.என்.பி.எஸ்.சி சிறப்புத் தேர்வை நடத்தி பணிவரன்முறை வழங்கிட வேண் டும். ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்து பணி நிரந்தரம் பெற்றுள்ள டாக்டர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை வழங்கிட வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக தமிழக மருத்துவர்களுக்கு ஊதியம், பதவி உயர்வு வழங்குவதோடு, விருப்ப ஓய்வு பெற விரும்பும் மருத்துவர்களுக்கு அதற்கான வாய்ப்பையும் வழங்கிட வேண்டும்.டி.என்.பி.எஸ்.சி மூலம் பணி அமர்த்தப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயிலலாம் என்ற விதி முறையை நீக்கி விட்டு , எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டாலும் அவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயில வாய்ப்பளிக்க வேண்டும்,நீலகிரி மாவட்டத்தில் ஓராண்டு சேவை முடித்த உடனேயே அரசு டாக்டர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக் கல்வி பயில வாய்ப்பளிக்க வேண்டும். மத்திய-மாநில அரசு மருத்துவர்களுக்கும்,ஈ.எஸ்.ஐ, ரயில்வே உள்ளிட்ட அரசு மற்றும் பொதுத்துறை மருத்துவர்களுக்கும் முதுநிலை மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். எம்.பி. பி.எஸ் படிப்பில் தேர்வுகளில் உள்ள பிரேக் சிஸ்டத்தை ரத்து செய்வதோடு பயிற்சி மருத்துவர்கள் ,பட்ட மேற்படிப்பு பயிலும் மருத்துவ மாணவர்களின் பயிற்சி கால ஊதியத்தை உயர்த்திட வேண்டும். முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு(ALL INDIA QUOTA) முறையை ரத்து செய்திட வேண்டும். அகில இந்திய ஒதுக்கீட்டு முறை நீடிக்கும் வரையில் அதில் மத்திய-மாநில அரசு மருத்துவர்களுக்கும், ஈ.எஸ்.ஐ, ரயில்வே மற்றும் பொதுத்துறை மருத்துவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கிடவேண்டும்.இலங்கையில் போரை நிறுத்திடவும், பேச்சு வார்த்தை மூலம் அமைதி வழியில் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு கண்டிடவும் உரிய நடவடிக் கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நாளை முதல் ஒரு வார காலத்திற்கு கோரிக்கை அட்டை மற்றும் கறுப்புப் பட்டை அணிந்து பணிக்குச் செல்லும் போராட்டம் நடைபெறும்.
மார்ச் -15, ஞாயிறு காலை11.00 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் அருகில் மாநிலத் தலைவர் டாக்டர் த.அறம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். பொருளாளர் டாக்டர் தி.மோகன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கிவைப்பார். மாநில நிர்வாகிகள் டாக்டர்கள் பி.துரை,ஆர்.சுந்தர்,அருள்நம்பி,கு.முத்துக்குமார், சாந்தி, திருவாரூர் சந்திர சேகர் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றுவர். மா நிலப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜீ.ஆர்.ரவீந்திரநாத் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைப்பார்.
மார்ச் -31,செவ்வாய் அன்று ஒருநாள் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நடைபெறும்.
இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.யி.