DASE's Press Release requesting to send the Tamil Doctors who volunteered to go and help the injured in srilanka
DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: ™: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
________________________________________________________________________________
இதழ்ச் செய்தி
தேதி :27.2.09
இலங்கைக்குச் செல்லும் இந்திய மருத்துவக் குழுக்களில் தமிழக மருத்துவர்களையும் அனுப்பிட வேண்டும்.சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.
இது குறித்து இச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு சிகிச்சை அளித்திட இந்திய அரசு மருத்துவக் குழுக்களை அனுப்பிட முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. மருந்துகளையும்,மருத்துவ உபகரணங்களையும் ,மருத்துவர் களையும்,இதர மருத்துவ ஊழியர்களையும் அனுப்பிடத்தயார் என தமிழக அரசும் கூறியுள்ள நிலையில் தமிழக மருத்துவக்குழுக்களையும் அனுப்பிடவேண்டும். தாய் மொழி தெரிந்த மருத்துவக்குழுக்களிடம் சிகிச்சை பெறுவதே சிறந்தது,விரும்பத்தக்கது என்பதால் தமிழக மருத்துவக் குழுக்களையும் அனுப்பிடவேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறது. இந்த மருத்துவக் குழுக்களில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் பங்கேற்கத் தயார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது.
இப்படிக்கு,
(டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்)
பொதுசெயலாளர்,டி.ஏ.எஸ்.ஈ