Doctors' Association for Social Equality

"Study! Service!! Struggle!!!"

Search Our Site







டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்
பொதுச்செயலாளர்,சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.
41-சாவடித் தெரு பல்லாவரம்,சென்னை-43
விஷீதீவீறீமீ:99406 64343 மீனீணீவீறீ-பீணீsமீவீஸீபீவீணீ@ரீனீணீவீறீ.நீஷீனீ
ஷ்மீதீsவீtமீ-ஷ்ஷ்ஷ்.பீணீsமீவீஸீபீவீணீ.ஷீக்ஷீரீ ___________________________________________________________
மத்திய அரசே! மக்கள் விரோத ' கிராமப்புற மருத்துவர்கள் ' திட்டத்தைக் கைவிடு !
'கிராமப் புறங்களில் போதிய மருத்துவர்கள் இல்லை.கிராமப்புறங்களுக்கு மருத்து வர்கள் செல்ல மறுக்கிறார்கள்.இதனால் தேசிய கிராமப்புற சுகாதாரா இயக்கத்தை செயல்படுத்த முடியவில்லை'என்ற காரணத்தைக் கூறி 'கிராமப்புற மருத்துவர்கள்' என்ற புதிய மூன்றரை ஆண்டு பட்டப்படிப்பை தொடங்கிட மத்திய மக்கள் நல் வாழ்வுத் துறையும்,இந்திய மருத்துவக் கழகமும் சேர்ந்து முயன்று வருகின்றன. இத்திட்டத்தின் படி 10 ஆயிரம் மக்கள் தொகைக்குட்பட்ட கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர் கள் பிளஸ்-டூ மதிப்பெண் அடிப்படையில் இப்படிப்புக்கு ஒவ் வொரு மாநிலத்திலிருந்தும் 50 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். படிப்பை முடித் ததும் கிராமப்புறங்களில் மட்டுமே அவர்கள் சேவை செய்ய அனுமதிக்கப்படு வார்கள் எனக் கூறப்படுகிறது.மேம்போக்காக பார்க்கும் பொழுது இத்திட்டம் வர வேற்கத்தக்கது எனக் கருதத் தோன்றுகிறது. ஆனால் மக்களின் தேவைகளையும் ,உண்மையான புள்ளிவிபரங்களையும்,அரசு சொல்லும் காரணங்களையும், இத்திட்ட த்தையும் அலசி ஆராயும் பொழுது இது ஒரு மோசமான திட்டம் என்பது தெளி வாகிறது.
மருத்துவர்கள் பற்றாக்குறை என்பதைவிட முதுநிலை மருத்துவம் பயின்ற மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையே நமது கிராமப்புற சுகாதாரத்துறையை பாதித்துள்ளது!
நமது நாட்டில் 1600 பேருக்கு ஒரு அலோபதி மருத்துவர் உள் ளார்.தேசிய அள வில் மருத்துவர்களின் சராசரி எண்ணிக்கை ஓரளவு திருப்தி அளிப்பதாக இருந்தா லும்,கிராமப்புற எண்ணிக்கை கவலையளிப்பதாவே உள்ளது.மக்களுக்கு சிகிச்சைய ளிப்போர் நகர்புறங்களைவிட கிராப்புறங்களிலேயே அதிகம் உள்ளனர். ஆனால், அவர்கள் மருத்துவத் தகுதி பெறாதவர்களாகவும்,போலி மருத்துவர் களாகவும் உள்ளனர். தகுதி வாய்ந்த மருத்துவர்களில் 74 விழுக்காட்டினர் வெறும் 26 விழுக் காடு மக்கள் தொகை கொண்ட நகர் புறங்களிலேயே குவிந்துள்ளனர். எண்பது விழுக்காடு மருத்துவ வசதிகளும் நகர்புறங்களிலேயே உள்ளன.மருத்துவர்கள்-மருத் துவ வசதிகள் பற்றாக்குறை என்ற பிரச்சனையைவிட பெரிய பிரச்சனையாக இருப் பது தகுதியான மருத்துவர்களும்,தரமான மருத்துவ சிகிச்சைகளும் நகர்ப்புறங்களி லேயே குவிந்து இருப்பதுதான்.இந்த ஏற்றத்தாழ்வான நிலைமைக்கு நமது மருத்துவத்துறையை தனியார் மயமாக்கியதும்,வியாபர மயமாக் கியதும்,.நமது சுகாதாராத்துறை மனிதவளத்தையெல்லாம் பெரிய தனியார் மருத்துவ மனைகள் அபகரித் துக்கொள்வதுமே முக்கிய காரணமாகும்.உலக மருத்துவச் சுற்றுலா மையமாக நம் நாட்டை மாற்றி அன்னியச் செலாவணியை ஈட்ட வேண்டுமென மத்திய அரசும் இந்த அபகரிப்புக்கு துணைபோகிறது.போதிய கிராமப்புற வளர்ச்சியின்மை, கிராமப்புற மருத்துவப் பணியில் திருப்தியின்மை, கிராமப்புறங்க ளில் சேவை செய்திட உரிய முறையில் அரசு ஊக்கம்வழங்காமை ,கூடுதல் வசதி வாய்ப்போடு வாழவேண்டுமென்ற ஆசை போன்றவையும் காரணமாகின்றன.
மேலும்,கிராமப்புற மருத்துவமனைகளில் கழிப்பிடம்,தங்கும் வசதிபோன்ற அடிப் படை வசதிகள் கூட இருப்பதில்லை.ஏறத்தாழ 16 விழுக்காடு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சொந்தக்கட்டிடமே இல்லை.கிராமங்களில் இறுக்கமாக நிலவும் சாதிக் கட்டமைப்பும்,பாதுகாப்பற்றச் சூழலும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மருத்துவர்களுக்கும்,பெண் மருத்துவர்களுக்கும் பெரும் பிரச்சனையாகவே உள் ளன.இது போன்ற காரணங்களாலும் மருத்துவர்கள் கிராமப்புறங்களுக்குச் செல்லத் தயங்குகின்றனர்.
கிராமப்புறங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருப்பது ஒரு உலகளா விய பிரச்சனையாகவே உள்ளது.ஐம்பது விழுக்காடு உலக மக்கள் கிராமப்புறங் களில் வாழ்கின்றனர்.ஆனால் 25 விழுக்காடு மருத்துவர்களே கிராமப்புறங்களில் உள்ளனர்.கிராமப்புற மருத்துவர்கள் எண்ணிக் கையை அதிகரிக்க உலக நாடுகள் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.கிராமப்புற மருத் துவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது,கூடுதல் ஊதியம்,படி,சலுகைகள்,வழங் குவது போன்றவற்றை நீண்டகாலமாக சில நாடுகள் செய்து வருகின்றன.நமது நா டும் இவ்வாறு செய்திருந்தால் இவ்வளவு மோசமான நிலை ஏற்பட்டிருக்காது.பெரி யமருத்துவ மனைகளுக்கு அரசு வழங்கும் வரிச்சலுகை,மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்ய வழங்கும் வரி விலக்கு, குறைந்த விலையில் நகரின் முக்கியப் பகுதிகளில் இடங்களை வழங்குதல் போன்ற எந்தச்சலுகையும் கிராமப்புற சிறிய மருத்துவமனைகளுக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில்தான், மத்திய அரசு'கிராமப்புற மருத்துவர்கள்' திட்டம் என்ற கவரச் சிகரமான திட்டத்தை அறிவித்துள்ளது.கிராமப்புறங்களில் மருத்துவர்களை அதிக ரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.ஆனால்,இப்புதிய திட் டத்தின் நோக்கம் அதுவல்ல.குறைந்த ஊதியத்தில் அனைத்து அரசு மருத்துவ மனைகளுக்கும் மருத்துவர் என்ற பெயரில் வெள்ளைக் கோட்டுப் போட்ட நபர் ஒருவரை நியமித்துவிட வேண்டுமென்பதுதான்!ஏற்கனவே கட்டாய சேவை என்ற பெயரில் மத்திய அரசு இதை சாதிக்க நினைத்து தோற்றது.இப்பொழுது அதற்காக புதிய வழிமுறையை கையாள்கிறது.
இத்திட்டம்,கிராமப்புற மாணவர்களுக்கும்-மக்களுக்கும் எதிராகவே அமையும். கல் விரீதியிலும்-சமூகரீதியிலும்- பொருளாதார ரீதியிலும் பின்தங்கிய கிராமப்புற மாண வர்களை இத்திட்டம் இரண்டாம்தர மருத்துவர்களாக்கி விடும்.சமூக நீதிக்கு எதி ராக அமைந்துவிடும்.கிராமப்புறங்களில் பிறந்தவர்கள் கிராமப்புறங்களில் மட்டுமே பணியாற்றவேண்டும் என்பதும் மற்றவர்கள் எங்கு வேண்டு மென்றாலும் பணி யாற்றலாம்,எந்த நாட்டிற்கும் போகலாம் என்பதும் என்ன நியாயம்?இது 'சட்ட த்தின் முன் அனைவரும் சமம்' என்பதற்கும்,'ஒரு இந்தியக்குடிமகன் நாட்டின் எந்தப்பகுதியிலும் தொழில் செய்யலாம்' என்ற அரசியல் சட்ட சரத்துக்களுக்கும் எதிரானதல்லவா?
இது 19 ஆம் நூற்றாண்டல்ல...20 ஆம் நூற்றாண்டின் மத்திய காலமுமல்ல...21ஆம் நூற்றாண்டு. அறிவியல் -தொழில் நுட்பம் பிரமாண்டமாக வளர்ந்த காலம். இந்தக் காலத்தில் அடிப்படை மருத்துவ அறிவியியலை பயின்றிட ஐந்தரை ஆண்டுகளே போதாது எனும் பொழுது ,மூன்றரை ஆண்டுகால படிப்பு மருத்துவத் தரத்தை பாதிக்காதா?ஐந்தரை ஆண்டு,எட்டரை ஆண்டு,12 ஆண்டு படிப்பெல்லாம் படித்த மருத்துவ நிபுணர்கள் நகரத்தாருக்கு,மூன்றரை ஆண்டுகால படிப்பு படித்த மருத் துவர் கிராமத்தாருக்கா?கிராமப்புற மக்களுக்கு தரமற்ற சிகிச்சை-நகர்புறத்தாருக்கோ உயர்தர சிகிச்சையா?என்ற கேள்விகள் எழுகின்றன.சீனாவில் கொண்டுவந்ததைப் போன்ற 'வெறுங்கால் மருத்துவர்கள்' திட்டம் இன்றைய காலக்கட்டத்திற்கு பொருத்தமற்றது.அவசியமற்றது.
இட ஒதுக்கீடு வழங்குவதால் தகுதி-திறமை போய்விடும் நோயாளிகள் செத்துவிடு வார்கள் என ஒப்பாரி வைத்தவர்கள்,மூன்றரை ஆண்டுகால படிப்பை ஆதரிப் பதேன்? சாகப் போகிறவர்கள் கிராமப்புற மக்கள் தானே என்பதாலா?உலகமய மாக்கல் காலக்கட்டத்தில் நமது மருத்துவர்கள் சர்வதேச தரமுடன் விளங்க வேண் டும்.ஆங்கிலம்,மருத்துவநெறிமுறைகள்,கணினிப் பயிற்சி போன்றவற்றை பெறவேண் டும்.அதற்காக மருத்துவப் படிப்பை ஆறரை ஆண்டுகளாக அதிகரிக்க வேண்டும். மருத்துவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வுகள் நடத்தி ,அதில் அவர்கள் தேர்ச்சி பெற்றால்தான் தொடர்ந்து மருத்துவத் தொழில் செய்ய அனும திக்க வேண்டுமென்றெல்லாம் பிதற்றிய இந்திய மருத்துவக் கழகம்,இன்று தரத்தை பற்றி கவலையின்றி இத்திட்டத்தைக் கொண்டு வருகிறது?ஏன் இந்த முரண்பாடு? படிக்கப்போவதும்-பாதிக்கப்படப் போவதும் கிராமப்புற மக்கள்தானே என்பதாலா?
பச்சிளங் குழந்தைகள் இறப்பு விகிதத்தையும்,பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதத்தையும் குறைப்பதற்கும்,தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தை செயல்படுத் துவதற்கும், எம்.பி.பி.எஸ் படிப்புப் படித்த மருத்துவர்களின் பற்றாக்குறை தடையாக இருப்பதைவிடப் பெருந்தடையாக இருப்பது முதுநிலை மருத்துவம் பயின்ற மருத் துவ நிபுணர்களின் பற்றாக்குறைதான்.2008 மாரச் இறுதியில் மத்திய மக்கள் நல் வாழ்வுத் துறையால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களை ஆராய்ந்தால் இந்த உண்மை வெளிப்படும்.எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர்கள் பணியாற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறை வெறும்15விழுக்காடு தான்.ஆனால்,சமுதாய மருத்துவ மையங்களில் அறுவை சிகிச்சை,மகப்பேறு,குழந் தைகள் மற்றும் பொதுமருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறை 72 விழுக்காட்டிற்கு மேல் உள்ளது.எனவே ,போதிய முதுநிலை மருத்துவ நிபுணர்கள் இல்லாததே முக்கியத்தடையாக உள்ளது.இதற்கு தீர்வுகாண முயலாமல், மூன்றரை ஆண்டு படிப்பை புகுத்துவதேன்? ஏனெனில்,அதிகமான ஊதியத்தை கொட்டி அழுது ,வச திகள் வழங்கி,சலுகைகள் அளித்து தகுதிவாய்ந்த மருத்துவர்களை நிரந்தரப்பணியில் அமர்த்துவதைவிட குறைந்த ஊதியத்தில் மூன்றரை ஆண்டுகள் பயின்ற மருத்துவர் களை நியமித்து விடலாமே என அரசு கருதுவதுதான்!
முதுநிலை மருத்துவ நிபுணர்களின் வேலையை ஐந்தரை ஆண்டு படிப்பான எம்.பி. பி.எஸ் பயின்ற மருத்துவர்களாலேயே செய்ய இயலாது எனக்கருதப்படுகிறது. இந் நிலையில், மூன்றரை ஆண்டு படிப்பைப் படித்த எம்.பி.பி.எஸ் படிப்புக்கும் கீழான கிராமப்புற டாக்டர்களால் எவ்வாறு மருத்துவ நிபுணர்களின் வேலையை செய்ய முடியும்?தகுதி வாய்ந்த மருத்துவர்கள் பற்றாக்குறைதான் பிரச்சனை என்கின்ற பொ ழுது,தகுதி குறைவான மருத்துவர்களை உருவாக்க நினைப்பது பிரச்சனையை திசை திருப்பும் நோக்கம் கொண்டது.
சரி,முதுநிலை மருத்துவர்கள் பற்றாக்குறைக்குக்குக் காரணம் என்ன? நீண்டகாலமாக முதுநிலை மருத்துவ இடங்கள் எண்ணிக்கையில் குறை வாக இருந்ததும்,அதில் அரசு மருத்துவர்களுக்கு போதிய இடஒதுக்கீடு இல்லாததும் ,அகில இந்திய ஒதுக் கீட்டு இடங்களில் அரசுமருத்துவர் களுக்கு இடஒதுக்கீடே இல்லாமல் இருந்த தும், படித்து முடித்ததும் தனியாக மருத்துவமனைகளை நடத்தத்துவங்குவதும்,பெரிய கார்பரேட் மருத்துவமனகளுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று விடுவதுமேயாகும்.இதை சரி செய்ய தயங்குவதேன்?
இப்பொழுது அரசு முக்கியமாக செய்ய வேண்டியது என்ன?இளநிலை மருத்துவர் களை அதிகமாக உருவாக்குவதோடு,முதுநிலை மருத்துவர்கள் பற்றாக்குறையை களையவேண்டும்.மருத்துவர்களை கிராமப்புறங்களுக்கு செல்லவைப்பதற்கான முயற் சிகளை எடுக்க வேண்டும் என்பதுதான்.இதற்கு,கிராமப்புற மருத்துவ மனைகளின் வசதிகளை போர்க்கால அடிப்படையில் மேம்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது போல் ஐம்பது விழுக்காடு கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும்.மத்திய அரசுக்கு இணையாக அனைத்து மாநில அரசுகளும் மருத்துவர்களுக்கு ஊதியம்,பதவி உயர்வு,படிகள் மற்றும் சலுகைகளை வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையிலும்,தற்காலிக அடிப்படையிலும் மருத்துவர்களை பணி நியமனம் செய்வதை கைவிடவேண்டும். முதுநிலை மருத்துவக்கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்யவேண்டும்.அரசுப் பணியில் இரண்டாண்டுகள் கிராமப்புற மருத்துவ பணியை முடித்த டாக்டர்களுக்கே அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத் துவக்கல்வி பயில வாய்ப்பளிக்க வேண்டும்.முதுநிலை மருத்துவப் படிப்பை முடித் தவுடன் குறைந்த பட்சம் 5 ஆண்டுகளாவது அரசு மருத்துவ மனைகளில் பணி புரியும் வகையில் உத்தரவாதம் பெறவேண்டும்.கிராமப்புறங்களில் சிறிய மருத்துவ மனைகளை தொடங்கும் மருத்துவர்களுக்கு இலவச இடம்,வரிவிலக்கு,குறைந்த வட் டியில் கடன் போன்ற சலுகைகளை வழங்கவேண்டும்.இவை நல்ல பலனை தரும்.
உதாரணமாக,சில சலுகைகள்வழங்கப்பட்ட தால்,தமிழ்நாடு,அசாம்,மணிப்பூர்,சிக் கிம்,திரிபுரா,கேரளா, கர்நாடகா,ஜார்கன்ட் உள்ளிட்ட 11 மாநிலங் களிலும்,5 யூனி யன் பிரதேசங்களிலும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத் துவர்கள் உள்ளனர்.ஆனால் பிகார்,சத்தீஷ்கர்,பஞ்சாப்,மத்திய பிரதேசம் ,ராஜஸ் தான் போன்ற மாநிலங்களில் மட்டும் நிலைமை மோசமாக உள்ளது.ஏராளமான ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இல்லை.இதற்குக் காரணம் இம் மாநில அரசுகளின் மருத்துவர் விரோதப் போக்கும்,ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை குறைந்த தொகுப்பூதியத்தில் பணியமர்த்துவதும்,மக்கள் நல்வாழ் வுத்துறையின் மீது நீண்ட காலமாக அக்கறை செலுத்தாததுமேயாகும்.
உண்மையிலேயே கிராமப்புற மக்களுக்கு தரமான சிகிச்சையை வழங்க வேண்டு மென நினைத்தால் அரசு மாற்று வழிமுறைகளை கையாளவேண்டும்.
தற்சமயம் நாடு முழுவதுமுள்ள 299 மருத்துவக்கல்லூரிகளில் 34 ஆயிரம் எம்.பி. பி.எஸ் இடங்கள் உள்ளன.32 ஆயிரம் எம்.பி.பி.எஸ் டாக்டர்கள் ஒவ்வொரு ஆண்டும் படிப்பை முடித்து வெளிவருகின்றனர்.உடனடியாக மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளின் இடங் களையும் 50 முதல் 150 விழுக்காடு வரை அதிகரிக்கலாம்.இதன் மூலம் மட்டும் அடுத்த 5 ஆண்டுகள் கழித்து கூடுதலாக 34 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளி வருவார்கள்.முது நிலை மருத்து வக்கல்வி இடங்களை அதிகரிக்க இந்திய மருத்துவக் கழகம் விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்து பேராசிரியர்;மாணவர் விகிதத்தை 1:1 என்பதிலி ருந்து 1:2 ஆக சமீபத்தில் உயர்த்தியுள்ளது.அதேபோல் இளநிலை மருத்துவக்கல்வி இடங்களை அதிகரிக்கவும் விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.
அமெரிக்கா, இங்கிலாந்து,கனடா,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மட்டும் 60 ஆயிரம் இந்திய மருத்துவர்கள் உள்ளனர். வெளிநாடுகளில் வாழும் இந்திய மருத்துவர்கள் தாயகம் திரும்ப உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.ஆண்டுதோறும் ஐந்து விழுக்காடு இந்திய மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகின்றனர்இந்திய மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுவதை தடுக்கவேண்டும்.
இந்தியா முழுவதும் மாவட்டம் தோறும் உடனடியாக மருத்துவக்கல்லூரிகளைத் தொடங்கவேண்டும்.மருத்துவப் பேராசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்கிட டிப்ள மோ படித்த அனைத்து டாக்டர்களுக்கும் ஓராண்டு அத்துறைகளில் சிறப்புப் பயிற் சியளித்து முதுநிலை மருத்துவப்பட்டம் வழங்கவேண்டும்.பிரச்சனையைத் தீர்க்க இதுவே சிறந்த வழி.
மருத்துவர்கள் பற்றாக்குறை மட்டுமின்றி, மருத்துவத்துறை இதர ஊழியர்களின் பற்றாக்குறையும் பெரும் பிரச்சனையாகவே உள்ளது.
சுகாதாரப் பணியார்களின் எண்ணிக்கை ஆயிரம் நபர்களுக்கு 2.5 என்ற அள விற்கு குறையாமல் இருத்தல் வேண்டும்.இந்த எண்ணிக்கைக்கு குறைவாக உள்ள நாடுகளை சுகாதாரப்பணியார்கள் 'கடும்பற்றாக்குறை' யாக உள்ள நாடுகள் என உலக நல நிறுவனம் குறிப்பிடுகிறது.இப்படிப்பட்ட நாடுகள் உலகில் 57 உள் ளன.அதில் இந்தியாவும் ஒன்று.இதைப் பற்றி அரசு அதிகம் பேசுவதில்லை.உதார ணமாக,மருத்துவர்கள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்கள் 12 விழுக்காடு தான்.ஆனால்,மருத்துவ ஆய்வக நுட்பணர் இல்லாமல் 38 விழுக்காடும், மருந் தாளுனர் இல்லாமல்16 விழுக்காடும் உள்ளன.
ஆரம்ப சுகாதார நிலையங்களில்56 விழுக்காடு ஆண் மருத்துவ உதவியாளர் ,20 விழுக்காடு துணைசெவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
துணைநிலையங்களில் 41விழுக்காடு ஆண் சுகாதார ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
நமக்கு 2 லட்சம் துணை செவிலியர்களும்,12 லட்சம் செவிலியர்களும்,2லட்சம் பல்மருத்துவர்களும் பற்றாக்குறையாக உள்ளனர்.இதற்குக் காரணம் என்ன?இதை எவ்வாறு அரசு சரி செய்யப்போகிறது?இவர்களின் படிப்புக்காலத்தையும் அரசு குறைக்கப்போகிறதா?கிராமப்புறங்களில் உள்ள மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறைக்கான காரணங்கள் பல பொதுவானவையே.கிராமப்புற வளர்ச்சி போதிய அளவு இல்லை என்பதுதான் அடிப்படையானது.இப்பிரச்சனையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிக,மிக அவசியமானது...அவசரமானது என்பதை அரசு உணரவேண்டும்.
கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் பயில உதவ வேண்டு மெனில், கிராமப்புற மாணவர்கள் மருத்துவக்கல்லூரிகளில் அதிகம் இடம் பெறும் வகையில் அவர்க ளுக்கென 25 விழுக்காடு இட ஒதுக்கீடு கொண்டுவர முயலவேண்டும்.கிராமப்புறம் என்பதோடு, அரசுப் பள்ளியில் பிளஸ்-டூ வரைப்படித்தவர்,தாய்மொழி வழியில் படித்தவர், முதல் தலைமுறையாக மருத்துவம் பயிலவருபவர்,பொருளாதார ரீதி யாக பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர் போன்றவற்றையும் கணக்கில் கொள் ளவேண்டும். இந்த இட ஒதுக்கீட்டை எஸ்.சி/எஸ்.டி/ எம்.பி.சி/ பி.சி இடங்க ளிலும்,பொதுப் போட்டி இடங்களிலும் உள் ஒதுக்கீடாக நடை முறைப்படுத்த வேண்டும்.
எனவே,கிராமப்புற மக்களையும்-மாணவர்களையும் இரண்டாம்தர குடிமக்களாக மாற்றும் இத்திட்டத்தை கைவிடவேண்டும்.கிராமப்புற மக்களுக்கு மட்டுமின்றி,அனை வருக்கும் தரமான -சமத்துமான-பாரபட்சமற்ற இலவச சிகிச்சை கிடைத்திட உருப் படியான திட்டங்களை போர்க்கால அடிப்படையில் மத்திய-மாநில அரசுகள் நிறை வேற்றிட வேண்டும்.அனைத்து டாக்டர்களுக்கும் அரசு நிரந்தர அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவதையும், அனைத்து கட்டாய சேவைகளையும் ரத்து செய்யவேண்டும்.
மருத்துவ மாணவர்களே ! மருத்துவர்களே !! கிராமப்புற மக்களுக்கு எதிரான இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஒன்றுபட்டு போராடுவோம் ! வெற்றி பெறும்வரை போராடுவோம் !!


Flash News - Exam Alerts

Get DASE Announcements and News by SMS

Our Site is seen from

Regular Readers