Doctors' Association for Social Equality

"Study! Service!! Struggle!!!"

All Messages

Search Our Site


DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :29.05.08

இதழ்-செய்தி

அரசு ஒதுக்கீட்டு மாணவர்களிடம் தனியார் கல்வி நிறுவனங்கள் நேரடியாகக் கட்டணம் வசூலிப்பதை தடை செய்ய வேண்டும்.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.


இது குறித்து இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி களில் சேரும் மாணவர்களிடம் அரசுக்குழு நிர்ணயித்த கட்டணத்தைவிட பல மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்ப டுகிறது.பேருந்துக் கட்டணம், கம்பியூட்டர் கட்டணம், உணவுக்கட்டணம் என பல்வேறு வகைகளிலும் கட் டணக் கொள்ளை நடைபெறுகிறது. இதைத் தடுத்திட மாணவர்களிடம் தனி யார் கல்வி நிறுவனங்கள் நேரடியாகக் கட்டணம் வசூலிப்பதை தடை செய் யவேண்டும்.அரசுக்குழு நிர்ணயித்த கட்டணத்தை நேரடியாக சம்பந்தப் பட்ட கல்வி நிறுவனங்களின் பெயரில் மருத்துவக்கல்வி இயக்குனரகத்திலோ அல்லது அண்ணாபல்கலைக்கழகத்திலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ மாணவர்கள் செலுத்திடும் நடைமுறையை கொண்டுவர வேண்டும்.இதைத் தவிர கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கல்விக் கட்டணத்தை மேலும் உயர்த் தக்கூடாது என நீதிபதி பாலசுப்பிரமணியன் குழுவை சமூக சமத்துவத்திற் கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது .

இப்படிக்கு,

[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]

பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.ஈ


DOCTORS’ ASSOCIATION FOR SOCIAL EQUALITY
(Regd No:322/2004)
# 41-Chavady street, Pallavaram, Chennai -43
Ph:044 22643561,22642790 Fax:044 22643562 Mobile:99406 64343
email:daseindia@gmail.com,dasetn@yahoo.com,daseindia@yahoo.com
Web Site:www.daseindia.org
Press –Release
Date: 1.1.08

DASE urges the TN Government not to allow DNB PG courses in medical college hospitals.

Regarding this Dr G.R.Ravindranath General Secretary of DASE has issued the following press statement.

Tamil Nadu Government has decided to start DNB PG medical courses in government medical college hospitals .For that admission notification has been given in some dailies, and in Tamil Nadu government health web site .Starting DNB PG courses in government medical college hospitals would affect the regular PGs academically. It would be against the Chennai high court’s order issued in the year 2004 stating that the government should not allow DNB PG courses in medical college hospitals. There is no transparent admission process, no proper CET .Admissions are made through qualifying examination instead of competitive examination which would lead to malpractices, irregularities, corruption and favoritism. There is no single window system and counseling. Neither communal reservations nor reservation for government doctors are provided in these seats .The central health ministry is promoting DNB courses with various motives and for the corporate hospitals’ interests .More over the central health ministry wants to curtail the rights of the MCI. Instead of starting DNB courses the TN government should try to start more PG courses, with proper approval of the MCI. DASE requests the Chief Minister of Tamil Nadu to take immediate steps in this matter.

Yours Truly,
(Dr.G.R.Ravindranath)
General Secretary, DASE.






DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :26.05.08
இதழ்-செய்தி

மருத்துவர்கள் மேற்பார்வையில் தடுப்பூசி போடும் திட்டம் குறித்த தமிழக முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

அரசுப்பணியாளர்களுக்கான நலக்காப்பீட்டுத்திட்டத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்குவது வருத்தமளிக்கிறது.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவ மனைகளிலும் தடுப்பூசிகள் மருத்துவர்கள் முன்னிலையில் போடப்படும் திட்டம் தொடரவேண்டும் எனவும்,மருத்துவனைகளை திறம்பட நிர்வகித்திட மருத்துவர்களின் நிர்வாகத்திறனை மேம்படுத்த பயிற்சியளிக்க வேண்டும் எனவும்

தமிழக முதல்வர் அறிவித்திருப்பதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்கிறது. சுகாதாரத்துறையில் உள்ள திறமையான மருத்துவ நிர்வாக அதிகாரிகளுக்கு கன்ஃப்பர்டு அய்.ஏ.எஸ் வழங்க வேண்டும்.

மருத்துவர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் உடனடியாக 565 மருத்துவர்களை நியமித்திட உத்தரவிட்டிருப்பது பாராட்டத்தக்கது.ஏற்கனவே தற்காலிக மாக பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கும்,புதிதாக நியமிக்கப்பட உள்ள மருத்துவர்களுக்கும் டி.என்.பி.எஸ்.சி சிறப்பு தேர்வு நடத்தி பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும் .

அரசுப்பணியாளர்களுக்கான நலக்காப்பீட்டுத்திட்டத்தை ஸ்டார்கெல்த் அண்டு அலைடு இன்சூரன்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதும்,ஆம்புலன்ஸ் சேவையை இ.எம்.ஆர்.ஐ என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதும், வருத்தமளிக்கிறது. நலக்காப்பீட்டுத்திட்டத்தை பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் வழங்க வேண்டும்.ஆம்புலன்ஸ் சேவையை மருத்துவத்துறை அல்லது தீயணைப்புத்துறை மூலம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வரை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு,

உண்மையுள்ள,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.யி







DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :25.05.08
இதழ்-செய்தி


மருத்துவர்கள் மேற்பார்வையில் தடுப்பூசி போடும் திட்டம். தமிழக முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க செய்யாறு சுகாதார மாவட்டப் பொதுக்குழு தீர்மானம்.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க செய்யாறு சுகாதார மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் டாக்டர் மேஜர் கே.சிவஞானம் தலைமையில் செய்யாறில் 25.5.08 மாலை நடைபெற்றது.டாக்டர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் சிறப்புரையாற்றினார்.கூட் டத்தில் டாக்டர்கள் விஜயராகவன,செல்லதுறை,அருளானந்தன்,தேவிப்பிரியா உட்பட ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டனர் .டாக்டர் சகுந்தலா நன்றி நவின்றார். கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் , அரசு மருத்துவ மனைகளிலும் தடுப்பூசிகள் மருத்துவர்கள் முன்னிலையில் போடப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருப்பதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்கிறது..இத்திட்டத்தை மேம்படுத்துவதற்கு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுத லாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும், துணை சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசிகளை போடவேண்டும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ஆம்புலன்சுகளும்,ஜீப்களும் வழங்க வேண்டும் .வட்டாரத்திற்கு இரண்டு மொபைல் கிளினிக்குகள் தொடங்கவேண்டும்.

அரசுப்பணியாளர்களுக்கான நலக்காப்பீட்டுத்திட்டத்தை ஸ்டார்கெல்த் அண்டு அலைடு இன்சூரன்ஸ் மற்றும் ஐசிஐசிஐ லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் மூலம் வழங் குவதை கைவிட்டு பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் வழங்க வேண்டும்.

தமிழக அரசு டாக் டர்களின் ஊதியத்தை உடனடியாகக் கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல் உயர்த்தி வழங்க வேண்டும்.ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்து தற்பொ ழுது காலமுறை ஊதியம் பெற்றுவரும் டாக்டர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை வழங்கி அரசு ஒதுக் கீட்டின் கீழ் முது நிலை மருத் துவக் கல்வி யில் சேர வழிகாண வேண்டும் . டாக்டர்களின் உயிர்- உடமைகளுக்கு பாதுகாப்பு வழங்க ஆந்திர அரசு போல் சட்டம் கொண்டு வரவேண்டும். 50 வயதுக்குமேல் முதுநிலைமருத் துவக்கல்வி பயில தடை கூடாது. தற்காலிக மாக பணியாற்றி வரும் முது நிலை மருத்துவர்களுக்கும்,பல் மருத்துவர்களுக்கும் டி.என்.பி.எஸ்.சி சிறப்பு தேர்வு நடத்தி பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும் .

சுகாதாரத்துறையில் உள்ள மருத்துவ நிர்வாக அதிகாரிகளுக்கு கன்ஃப்பர்டு அய்.ஏ.எஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள்.தலைவர்டாக்டர் மேஜர் கே.சிவஞானம்,துணைத் தலைவர்கள் டாக்டர்கள் விஜயராகவன,சகுந்தலா செயலாளர் டாக்டர் சரேஷ், ,துணை செயலாளர்கள் பிரியா,சன்முகராஜா, பொருளாளர் அருளானந்தன்.

இப்படிக்கு,
உண்மையுள்ள,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.யி

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :23.05.08
இதழ்-செய்தி


மருத்துவர்கள் மேற்பார்வையில் தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிட முயன்றால் போராட்டம் நடத்தப்படும்.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் எச்சரிக்கை.


இது குறித்து இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி தட்டம்மை தடுப்பூசி போட்டதில் 4 குழந்தைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் பலியான தற்கு மனிதத் தவறே காரணம். கரைப்பானை மாற்றி போட்டதாலேயே இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது. நேர்மையான முறையில் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்.

மனிதத் தவறுகள் மூலம் இதுபோன்ற மரணங்கள் நடைபெறாமல் தடுத் திட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவ மனைகளிலும் தடுப்பூசிகளை மருத்துவர்கள் மேற்பார்வையில் போடும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்திவருகிறது.எல்லோருக்கும் தடுப்பூசிகள் வழங்கப் படுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் பாதுகாப்பாக வழங்குவதும் முக்கியம். எனவே, அரசின் இத்திட்டம் வரவேற்கத்தக்கது.இத்திட்டத்தை மேம்படுத்திட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதலாக மருத்துவர்களையும், குழந்தைகள் நல மருத்துவர்களையும் நியமிக்க வேண் டும். துணை சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசிகளைப் டாக்டர்கள் மேற் பார்வையில் போடவேண்டும். தொலைதூர கிராமப்புறங்களுக்கு நேரடியாகச் சென்று மருத்துவக் குழுவினர் தடுப்பூசி போடும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ஆம்புலன்சுகள்,ஜீப்புகள் வழங்க வேண்டும். வட்டாரத்திற்கு இரண்டு மொபைல் கிளினிக்குகள் தொடங்க வேண்டும். படிப்படியாக 15 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக்க வேண்டும். தடுப்பூசி மருந்து குப்பிகளில் மாசு-நச்சு கலப்பு ஏற்படுவதை தடுத்திட மல்டிடோஸ் குப்பிகளை வழங்குவதற்கு பதிலாக சிங்கிள் டோஸ் குப்பிகளை வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரத்திற்கு ஒருநாள் தடுப்பூசி வழங் குவதை தேவைப்படின் மூன்று நாளாக அதிகரிக்கவேண்டும்.இதர அரசு மருத்துவ மனைகளில் வாரத்தில் ஆறு நாட்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். தடுப் பூசி போட வரும் தாய் மார்களுக்கு போக்குவரத்து செலவை வழங்கு வதுடன், கூலி உழைப்பை நம்பியுள்ள தாய்மார்களுக்கு ஒரு நாள் வறு வாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் ரூபாய் 150 வழங்க வேண்டும். தடுப்பூசி போட்டபின் காத்திருக்கும் நேரத்தில் தாய்மார்களுக்கு உணவும், அடிப்படை நலவாழ்வுக் கல்வியும் வழங்க வேண்டும். இதற்கு தொலைக் காட்சி பெட்டிகளையும், சுகாதார விழிப்புணர்வு குறுந்தகடுக ளையும் பயன் படுத்த வேண்டும்.பெண் கரு-சிசு கொலைக்கு எதிரான கருத்துக்களையும் ,பாலின சமத்துவத்தையும் ,தாய்பால் வழங்குவதின் முக்கியத்துவம் போன் றவற்றையும் விளக்க வேண்டும் போன்ற யோசனை கள் சமூக சமத்துவத் திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் முன் வைக்கப் பட் டுள்ளது.இவற்றில் பலவற்றை அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந் நிலையில் இத்திட்டத்தை சில அமைப்புகள் சுய நல நோக்கத் துடன் எதிர்க்கின்றன.தங்கள் நலனை பொதுமக்கள் நலனாக மாற்ற முயல் கின்றன.டாக்டர்கள் மேற்பார்வையில் தடுப்பூசி போடும் திட்டத்தை நேரடி யாக எதிர்க முடியாமல் மறைமுகமாக எதிர்த்திட முனைகின்றன. பாதுகாப் பாக தடுப்பூசிகளை போட உறுப்படியான மாற்று யோசனைகளைக் கூறா மல் பழைய முறையே தொடரவேண்டும் என்ற உள்நோக்கோடு தவறான காரணங்களை அள்ளி வீசி வருகின்றன.ஆடு மாடுகளுக்கு ஊசிபோடுவது போன்ற பாதுகாப்பற்ற பழைய முறை மக்களுக்கும் ,சமூக முன்னேற்றத் திற்கும் எதிரானது. தங்களது தவறான நிலைபாட்டை அவ்வமைப்புகள் கைவிட வேண்டும்.

நிர்பந்தத்திற்கு பணிந்து மருத்துவர்கள் மேற்பார்வையில் தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிட தமிழக அரசு முயன்றால் மக்கள் நலன் கருதி அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்படும்.

இப்படிக்கு,

உண்மையுள்ள,
டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்
பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :20.05.08
இதழ்-செய்தி

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மருத்துவக்கவுன்சில் அங்கிகாரத்தைப் பெற வேண்டும். தமிழக அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க சென்னை மாவட்டக்குழு வேண்டுகோள்.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க சென்னை மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் டாக்டர் சுதர்ஷன் தலைமையில் சென்னை ஜீவா இல்லத்தில் 20.5.08 மாலை நடைபெற்றது.டாக்டர் திருலோகச்சந்தர் அனைவரையும் வரவேற்றார். பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் சிறப்புரையாற்றினார்.டாக்டர் லதா நன்றி நவின்றார். கூட்டத்தில் டாக்டர்கள் அனுபமா ரோஷன்,நிஷா கங்கா உட்பட ஏராளமான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • இந்திய மருத்துவக்கவுன்சிலின் அங்கிகாரம் இல்லாததால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களில் இவ்வாண்டு மாணவர்களை சேர்க்க முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. பேராசிரியர்கள் பற்றாக்குறையால் தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஊதியம் குறைவாக இருப்பது தான் பேரா சிரியர்கள் பற்றாக்குறைக்கு மிக முக்கியக்காரணம்.இக்குறைபாட்டை சரி செய்ய வேண்டும். முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களுக்கு மீண்டும் அங்கிகாரம் பெறவேண்டும்.
  • அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு முதுநிலை மருத்துவக் கல்வி இடங் களை வழங்குவதை உடனடியாக ரத்து செய்யவேண் டும்.அவ்வாறு ரத்து செய்தவுடன் தமிழ் நாட்டில் முதுநிலை மருத்துவ மாண வர்களுக்கு போடப்படும் கட்டாய சேவை திட்டத்தை ரத்து செய்ய வேண் டும்.
  • தற்காலிக மாக பணியாற்றி வரும் முது நிலை மருத்துவர்களுக்கும், மருத்துவர்களுக்கும்,பல் மருத்துவர்களுக்கும் டி.என்.பி.எஸ்.சி சிறப்பு தேர்வு நடத்தி பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும் .
இப்படிக்கு,
உண்மையுள்ள,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.யி

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :18.05.08
இதழ்-செய்தி


தடுப்பூசி மரணங்கள்- உண்மையான காரணத்தை கண்டறிந்து பரிகாரம் காண ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்திட வேண்டும். மத்திய அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

கடந்த மாதம் 23 ஆம் தேதி தட்டம்மை தடுப்பூசி போட்டதில் 4 குழந்தைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் பலியானதற்குக் கரைப்பானை மாற்றி போட்டதும் அதனால் ஏற்பட்ட நச்சுக்கலப்பும் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.எனவே இது குறித்து நேர்மையான முறையில் விசா ரணை நடத்த வேண்டும்.இந்தத் தடுப்பூசி மரணங்கள் அரசியலாக்கப்படுவது வருந்தத்தக்கது.

மத்திய -மாநில அரசுகள் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டு பிரச்ச னையை திசைதிருப்பக்கூடாது. தடுப்பூசி மரணங்களுக்கான உண்மையான காரணத்தை வெளியிட்டால் தான் தடுப்பூசியை பற்றிய அச்சம் மக்கள் மனதிலிருந்து நீங்கும்.எனவே,ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமை யில் ஓய்வு பெற்ற மருத்துவ நிபுணர்களையும் உள்ளடக்கிய குழுவை அமை த்திட வேண்டும்.

எல்லோருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படுவது எவ்வளவு முக்கிய மோ அதேபோல் பாதுகாப்பாக வழங்குவதும் முக்கியம்.எனவே பாதுகாப்பு கருதி தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் , அரசு மருத்துவ மனைகளிலும் தடுப்பூசிகளை மருத்துவர்கள் முன்னிலையில் உரிய முன்னெச் சரிக்கை நடவடிக்கையுடன் போடும் திட்டத்தை நடைமுறைப் படுத்துவது பாராட்டத்தக்கது. இத்திட்டத்தை நடை முறைப்படுத்துவதில் உள்ள பிரச்ச னைகளை களைவதற்கு போர்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்பட வேண்டும் . தடுப்பூசி போட்டுக்கொள்ளும் குழந்தைகள் மற்றும் தாய்மார் கள் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட அரசின் இத்திட்டத்தை சில அமைப்புகள் சுய நல நோக்கோடு எதிர்ப்பது கண்டிக்கத்தக்கது.


தரமுள்ள ஊசிக்குழல்களை மட்டுமே தடுப்பூசி திட்டத்திற்கு மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை வழங்கவேண்டும். தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்யும் மூன்று பொதுத்துறை நிறுவனங்களை மீண்டும் செயல்பட வைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

கட்டாய சேவைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விரைவில் உத்தர விடப்படும் என அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள் ளது வருந்தத்தக்கது . இது கிராமப்புற மாணவர்களுக்கும் ,பெண்களுக்கும், சமூக நீதிக்கும் , தொழிலாளர் நலச்சட்டங்களுக்கும் எதிரானது . கட்டாய சேவை என்ற பெயரில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்களின் பணியிடங்களை ஒழித்துக் கட்ட அவர் முயன்றால் அதை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்.

இப்படிக்கு,
உண்மையுள்ள,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.யி

DOCTORS’ ASSOCIATION FOR SOCIAL EQUALITY
(Regd No:322/2004)
# 41-Chavady street,Pallavaram,Chennai -43
Ph:044 22643561,22642790 Fax:044 22643562 Mobile:99406 64343
email:daseindia@gmail.com,dasetn@yahoo.com,daseindia@yahoo.com
Web Site:www.daseindia.org
PRESS - RELEASE
Date :18.5.08
Committee should be set up under the chairmanship of Retired supreme court Judge to find out the true cause of Vaccination Deaths .DASE urges the central government.

Regarding this DASE General secretary Dr.G.R.Ravindranath has issued the following press statement.

It is told the deaths of 4 children at Thiruvallur district last month on 23 rd was due to the diluent . The cause for the deaths should be revealed to the people to wipe out unnecessary doubts and fear about vaccines .It is very sad that the whole issue has been politicized. State and central health ministries are finding faults against each other.It is diverting the problem.To find out the real cause for the deaths a committee should be set up under the chairmanship of a retired supreme court judge and retired public health expert doctors should be included in the committee.

Safer immunization. is very very important as such universal immunization. We should not loose valuable lives due to unsafe methods of vaccination. All precautions should be taken during immunization to avoid such incidents . Immunization should be done in the presence of a qualified doctor. In this regard the Tamilnadu govern ment has taken some appre ciable steps .Some organizations oppose this government’s new immuni zation method due to selfish reasons. DASE strongly condemns that.

DASE welcomes the central Health minister Dr.Anbumani Ramadass’s statement to reopen the vaccine producing three PUCs . DASE urges the center to provide high quality AD syringes for immunization.

It is regrettable that the central Health minister Dr. Anbumani Ramadass has decided to implement the compulsory service. It will be against the rural students, women, and social justice .If he tries to abolish more than 32 thousand doctors job opportunities in the name of compulsory service ,nation wide struggles will be organized .

Dr.G.R.Ravindranath
General Secretary,DASE.

DOCTORS’ ASSOCIATION FOR SOCIAL EQUALITY
(Regd No:322/2004)
# 41-Chavady street,Pallavaram,Chennai -43
Ph:044 22643561,22642790 Fax:044 22643562 Mobile:99406 64343
email:daseindia@gmail.com,dasetn@yahoo.com,daseindia@yahoo.com
Web Site:www.daseindia.org

PRESS - RELEASE
Date :15.5.08
Union Health Ministry should reopen the Vaccine producing PSUs.
Regarding this Dr.G.R.Ravindranath General Secretary DASE has issued the following press statement.

After closing the vaccine producing public sector units situated at Coonnoor ,Kasouli and Chennai, by the union health ministry there is acute shortage of various vaccines in government hospitals through out the country .Giving Injection .T.T is also restricted in government PHCs in Tamilnadu .The cost of the vaccines of the multinational private companies are very high .It will affect the prevention of various vaccine preventable diseases and increase the mortality and morbidity .It will harm the public health .The WHO has offered help to improve the vaccine producing technology of these three PSUs . So, the union health ministry should take immediate steps to re open the PSUs.

Dr.G.R.Ravindranath
General Secretary,DASE.

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :13.05.08
இதழ்-செய்தி

தனியார் மருத்துவக்கல்லூரி கல்வி கட்டண பிரச்சனை- முதல்வர் தலையிட வேண்டுகோள்.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது.இதனால் ஏழை-எளிய மாணவர்கள் அரசு ஒதுக் கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத நிலை உள்ளது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் ,அரசுப் பணியாளர்களின் குழந்தைகளும் மிகுந்த சிரமங்களுக்கிடையேதான் படிப்பைத் தொடரவேண்டியுள்ளது.அரசுக்கான இடங்களை தனி யார் கல்லூரிகளிலிருந்து பெறமுடிந்த போதிலும், கல்விக் கட்டண உயர்வால் அவற்றின் பலன் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் களுக்கு கிடைக்கவில்லை.கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை ஏற்பட்டுள்ளது.இது சமூக நீதிக்கு எதிரானது.எனவே தமிழக முதல்வர் இப்பிரச்சனையில் உடனடியாகத் தலையிடவேண்டும். கல்விக் கட்டணத்தை குறைத்திட வேண்டும்.மாணவர் சேர்க்கைக்கு முன்பாகவே கட்டணத்தை அறிவிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைவிட கூடுதலாக வசூலிக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் . தி.மு.க தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளபடி தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். ஏற்கனவே மஹாராஷ்டிரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.எனவே சமூக நீதியை காத்திட தமிழக அரசும் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்திட வேண்டும்.

ஈரோடுமாவட்டம் பெருந்துறையில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவன(ஐ.ஆர்.டி) மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர்களை அரசு மருத்துவர்களாகக் கருதவேண்டும், அவர்களுக்கு அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை மருத்து வக்கல்வி பயில இடம் ஒதுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அங்கு பயிலும் மாணவர்களையும் அரசு மருத்துவ மாணவர்களாகக் கருதி அரசு மருத் துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அளவிற்கு மட்டுமே கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு,
உண்மையுள்ள,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.யி


DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :06.05.08
இதழ்-செய்தி

தடுப்பூசி போடுவது என்ற பெயரில் இனிமேலும் குழந்தைகளைப் பலி இடக்கூடாது.குழந்தைகள் நலனுக்கு எதிராக அரசு டாக்டர்கள் சங்கத் தலைமை செயல்படுவதை உடனடியாகக் கைவிடவேண்டும்.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க சேலம் மாவட்டப் பொதுக்குழு வேண்டுகோள்.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க சேலம் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் டாக்டர் கே.ராஜசேகரன் தலைமையில் சேலம் கணேஷ் மஹாலில் 6.5.08 மாலை நடைபெற்றது.டாக்டர் ஏ. கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் சிறப்புரையாற்றினார்.டாக்டர் மகேந்திரன் நன்றி நவின்றார். கூட் டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த 23 ஆம் தேதி தட்டம்மை தடுப்பூசி போட்டதில் 4 குழந்தைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் பலியான தற்குக் காரணம் கரைப்பானை மாற்றி போட்டதும் அதனால் ஏற்பட்ட நச்சுக்கலப்பும் தான் எனக் கூறப்படுகிறது.எனவே இது குறித்து நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும்.மனிதத் தவறினால் தடுப்பூசிகள் போடும் பொழுது குழந் தைகளும் ,கர்ப்பிணிப் பெண்களும் பலியாகிவிடக்கூடாது.எல்லோருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் பாதுகாப்பாக வழங்குவதும் முக் கியம்.எனவே பாதுகாப்பு கருதி தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் , அரசு மருத்துவ மனைகளிலும் தடுப்பூசிகளை மருத்துவர்கள் முன்னிலையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக் கையுடன் போடும் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. இதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் குழந்தைகள் மற்றும் கர்ப்பி ணிப் பெண்களின் நலன் கருதி வரவேற்றுள்ளது.இத்திட்டத்தை நடை முறைப்படுத்துவதில் உள்ள பிரச்சனைகளை களைவ தற்கும், மேம்படுத்துவதற்கும் போர்கால அடிப்படையில் செயல்படவேண்டும் என வலியறுத்தியுள்ளது.குறிப்பாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுத லாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும், துணை சுகாதார நிலையங்களிலும் தடுப் பூசிகளைப் போடவேண்டும்,15 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக்கப்பட வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ஆம்புலன்சுகளும்,ஜீப்களும் வழங்கப்பட வேண்டும் .வட்டாரத்திற்கு இரண்டு மொபைல் கிளினிக்குகள் தொடங்கவேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிவருகிறது.

இந்நிலையில் தமிழக அரசும் தடுப்பூசி வழங்குவதை ஆய்வு செய்ய ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் அரசு டாக்டர்கள் சங்கத் தலைமை தடுப்பூசி மர ணங்கள் பற்றி துளிகூட கவலைப்படாமல் பழைய முறையிலேயே தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என கோரிவருவது வேதனையளிக்கிறது. அரசு டாக்டர்கள் சங்கத் தலை மை சமூகப் பொறுப்பில்லாமல் செயல்படுவது டாக்டர்கள் மத்தியில் எரிச்சலை ஏற் படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான நிலையை அச்சங்கத் தலைமை உடன டியாகக் கைவிடவேண்டும்.

அரசுப்பணியாளர்களுக்கான நலக்காப்பீட்டுத்திட்டத்தை ஸ்டார்கெல்த் அண்டு அலைடு இன்சூரன்ஸ் மற்றும் ஐசிஐசிஐ லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் மூலம் வழங் குவதை கைவிட்டு பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் வழங்க வேண்டும்.

தமிழக அரசு டாக் டர்களின் ஊதியத்தை உடனடியாகக் கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல் உயர்த்தி வழங்க வேண்டும்.ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்து தற்பொ ழுது காலமுறை ஊதியம் பெற்றுவரும் டாக்டர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை வழங்கி அரசு ஒதுக் கீட்டின் கீழ் முது நிலை மருத் துவக் கல்வி யில் சேர வழிகாண வேண்டும் . கட்டாய சேவைத் திட்டம் என்ற பெயரில் மருத் துவக் கல்வியை ஐந்தரை ஆண்டுகளிலி ருந்து ஆறரை ஆண் டுகளாக உயர்த் தக் கூ டாது .32 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மருத்துவர்களின் பணியிடங்களை ஒழித்துக் கட்ட மத்திய மக்கள் நல் வாழ்வுத்துறை முயலக்கூடாது.

பயிற்சி மருத்துவர்கள் பட்ட மேற் படிப்பு மாணவர்களின் பயிற்சி கால ஊதி யத்தை உயர்த்த வேண்டும். டாக்டர்களின் உயிர்- உடமைகளுக்கு பாதுகாப்பு வழங்க ஆந்திர அரசு போல் சட்டம் கொண்டு வரவேண்டும்.அரசு மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்த வேண் டும்.கட்டண வார்டு களை துவக்கி ஏழைகள் இலவ சமாக மருத்துவ வசதி பெறும் உரிமையை பறிக்கக் கூடாது.

50 வயதுக்குமேல் முதுநிலைமருத் துவக்கல்வி பயில தடை கூடாது. தற்காலிக மாக பணியாற்றி வரும் முது நிலை மருத்துவர்களுக்கும்,பல் மருத்துவர்களுக்கும் டி.என்.பி.எஸ்.சி சிறப்பு தேர்வு நடத்தி பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும் .

நோய் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் குன்னூர் லூயிபாஸ்டர் நிறுவ னம்,கசவ்லி மத்திய தடுப்பூசி ஆராய்ச்சி நிறுவனம்,சென்னை கிண்டி பி.சி.ஜி நிறுவனம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு மூடக்கூடாது.

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி யினருக்கான 27 விழுக்காடு இடஒதுக் கீட்டில் வசதிபடைத்தோருக்கு இடஒதுக்கீடு இல்லை என்பதை நீக்க வேண் டும். தனியார் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

சுகாதாரத்துறையில் உள்ள மருத்துவ நிர்வாக அதிகாரிகளுக்கு கன்ஃப்பர்டு அய்.ஏ.எஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இப்படிக்கு,
உண்மையுள்ள,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.யி


DOCTORS’ ASSOCIATION FOR SOCIAL EQUALITY
(Regd No:322/2004)
# 41-Chavady street,Pallavaram,Chennai -43
Ph:044 22643561,22642790 Fax:044 22643562 Mobile:99406 64343
email:daseindia@gmail.com,dasetn@yahoo.com,daseindia@yahoo.com
Web Site:www.daseindia.org

PRESS - RELEASE

Date :4.5.08

Thiruvallur District branch welcomes TN Govt decision to give vaccinations at PHCs.

Regarding this DASE has issued the following press statement.

Doctors Association For Social Equality’s Thiruvallur dt committee meeting was held on 4.5.08 in T.Nagar ,Chennai .Dr.kamalraj presided over the meeting.District secretary Dr.Elanchelian,Treasurer Dr.Balakrishnan ,State general secretary Dr.G.R.Ravindranath addressed the gathering. The following resolutions have been passed.

The deaths of 4 children at Thiruvallur district sent shock waves across the country.To avoid such incidents in future our immunization programme should be completely changed.All precautions should be taken during immunization. Immunisation shoud be done in the presence of a qualified doctor. Essential life saving drugs must be available to treat medical emergencies like anaphylaxis,allergies and toxic shock syndrome. Suitable steps should be taken to avoid contamination in the vaccines at all level .Vaccines should be safely kept in cold storage at stipulated temperature .Single dose vials alone should be used to avoid contam ination.The vaccines’ safety and potency should be tested in a standard laboratory before distribution. Doctors should be properly trained to treat acute medical emergencies .In this regard the Tamilnadu govern ment has taken some appreciable steps.DASE welcomes that.Ambulances should be provided to all PHCs and government hosp itals.

More number of doctors should be appointed in PHCs.If possible doc tors should be appointed in sub centers too.Well equipped mobile clinics should be introduced in more numbers.Doctors should be appointed sepa rately for that. Dr.Muthulakshmi reddy maternity fund should be distributed through the revenue department.

The NGOs and school admini strations should not be allowed to carry out immunization programmes with out proper permission .

TN Govt should take necessary steps to regularize the services of contract doctors who are all working under Time scale of pay to enable them to go for PG studies under service Quota.

The following doctors have been elected as new office bearers.Kamalraj president,Vanitha Malar and Balakrishnan vice presidents,Elanchezhian General secretary,Maheshwaran and Manimaran Asst secretaries,Dhinakar as Treasurer.Dr.Balakrishnan delivered vote of thanks.
Dr.G.R.Ravindranath
General Secretary,DASE.


DOCTORS’ ASSOCIATION FOR SOCIAL EQUALITY

(Regd No:322/2004)

# 41-Chavady street,Pallavaram,Chennai -43

Ph:044 22643561,22642790 Fax:044 22643562 Mobile:99406 64343

email:daseindia@gmail.com,dasetn@yahoo.com,daseindia@yahoo.com

Web Site:www.daseindia.org



PRESS - RELEASE

Date :30.4.08

Ensure safe Vaccination .Vaccination deaths investigation should be free and fair. DASE demands.

Regarding this Dr.G.R.Ravindranath General Secretary DASE has issued the following press statement.

The deaths of 4 children at Thiruvallur district sent shock waves across the country.Due to this incident our immunization programme and government hospitals have lost the hope of the people.It will affect the immunization programme of the country.Vaccine preventable diseases and their morbidity and mortality will increase.It will affect the public health and economic development of our country.The central investigation team’s inve stigation is not satisfactory.So, a neutral team should be allowed to invst igate the cause of death and incident in a free and fair manner.The true cause of death should be found and the report should be made available for the public.

To avoid such incidents in future our immunization programme should be completely changed.All precautions should be taken during immune ization.Immunisation shoud be done in the presence of a qualified doctor. Essential life saving drugs must be available to treat medical emergencies like anaphylaxis,allergies and toxic shock syndrome. Ambul ances and oxygen cylinders should be provided .Doctors should be properly trained to treat the acute medical emergencies .In this regard the Tamilnadu govern ment has taken some appreciable steps.The NGOs and school admini strations should not be allowed to carry out immunization programmes with out proper permission .







Suitable steps should be taken to avoid contamination in the vaccines at all level .Vaccines should be safely kept in cold storage at stipulated temp erature .Single dose vials alone should be used to avoid contam ination.The vaccins’ safety and potency should be tested in a standard laboratory before distribution .

Ambulances should be provided to all PHCs and government hosp itals.More number of doctors should be appointed in PHCs.If possible doc tors should be appointed in sub centers too.Well equipped mobile clinics should be introduced in more numbers.Doctors should be appointed sepa rately for that.Dr.Muthulakshmi reddy maternity fund should be distributed through the revenue department.The center and state governments should allocate more funds for the immunization programmes.


( Dr.G.R.Ravindranath )

General Secretary,DASE.

Flash News - Exam Alerts

Get DASE Announcements and News by SMS

Our Site is seen from

Regular Readers