DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org

தேதி :20.05.08
இதழ்-செய்தி
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மருத்துவக்கவுன்சில் அங்கிகாரத்தைப் பெற வேண்டும். தமிழக அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க சென்னை மாவட்டக்குழு வேண்டுகோள்.
இது குறித்து இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க சென்னை மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் டாக்டர் சுதர்ஷன் தலைமையில் சென்னை ஜீவா இல்லத்தில் 20.5.08 மாலை நடைபெற்றது.டாக்டர் திருலோகச்சந்தர் அனைவரையும் வரவேற்றார். பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் சிறப்புரையாற்றினார்.டாக்டர் லதா நன்றி நவின்றார். கூட்டத்தில் டாக்டர்கள் அனுபமா ரோஷன்,நிஷா கங்கா உட்பட ஏராளமான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- இந்திய மருத்துவக்கவுன்சிலின் அங்கிகாரம் இல்லாததால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களில் இவ்வாண்டு மாணவர்களை சேர்க்க முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. பேராசிரியர்கள் பற்றாக்குறையால் தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஊதியம் குறைவாக இருப்பது தான் பேரா சிரியர்கள் பற்றாக்குறைக்கு மிக முக்கியக்காரணம்.இக்குறைபாட்டை சரி செய்ய வேண்டும். முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களுக்கு மீண்டும் அங்கிகாரம் பெறவேண்டும்.
- அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு முதுநிலை மருத்துவக் கல்வி இடங் களை வழங்குவதை உடனடியாக ரத்து செய்யவேண் டும்.அவ்வாறு ரத்து செய்தவுடன் தமிழ் நாட்டில் முதுநிலை மருத்துவ மாண வர்களுக்கு போடப்படும் கட்டாய சேவை திட்டத்தை ரத்து செய்ய வேண் டும்.
- தற்காலிக மாக பணியாற்றி வரும் முது நிலை மருத்துவர்களுக்கும், மருத்துவர்களுக்கும்,பல் மருத்துவர்களுக்கும் டி.என்.பி.எஸ்.சி சிறப்பு தேர்வு நடத்தி பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும் .
இப்படிக்கு,
உண்மையுள்ள,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.யி
உண்மையுள்ள,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.யி