DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org

தேதி :06.05.08
இதழ்-செய்தி
தடுப்பூசி போடுவது என்ற பெயரில் இனிமேலும் குழந்தைகளைப் பலி இடக்கூடாது.குழந்தைகள் நலனுக்கு எதிராக அரசு டாக்டர்கள் சங்கத் தலைமை செயல்படுவதை உடனடியாகக் கைவிடவேண்டும்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க சேலம் மாவட்டப் பொதுக்குழு வேண்டுகோள்.
இது குறித்து இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க சேலம் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் டாக்டர் கே.ராஜசேகரன் தலைமையில் சேலம் கணேஷ் மஹாலில் 6.5.08 மாலை நடைபெற்றது.டாக்டர் ஏ. கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் சிறப்புரையாற்றினார்.டாக்டர் மகேந்திரன் நன்றி நவின்றார். கூட் டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த 23 ஆம் தேதி தட்டம்மை தடுப்பூசி போட்டதில் 4 குழந்தைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் பலியான தற்குக் காரணம் கரைப்பானை மாற்றி போட்டதும் அதனால் ஏற்பட்ட நச்சுக்கலப்பும் தான் எனக் கூறப்படுகிறது.எனவே இது குறித்து நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும்.மனிதத் தவறினால் தடுப்பூசிகள் போடும் பொழுது குழந் தைகளும் ,கர்ப்பிணிப் பெண்களும் பலியாகிவிடக்கூடாது.எல்லோருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் பாதுகாப்பாக வழங்குவதும் முக் கியம்.எனவே பாதுகாப்பு கருதி தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் , அரசு மருத்துவ மனைகளிலும் தடுப்பூசிகளை மருத்துவர்கள் முன்னிலையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக் கையுடன் போடும் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. இதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் குழந்தைகள் மற்றும் கர்ப்பி ணிப் பெண்களின் நலன் கருதி வரவேற்றுள்ளது.இத்திட்டத்தை நடை முறைப்படுத்துவதில் உள்ள பிரச்சனைகளை களைவ தற்கும், மேம்படுத்துவதற்கும் போர்கால அடிப்படையில் செயல்படவேண்டும் என வலியறுத்தியுள்ளது.குறிப்பாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுத லாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும், துணை சுகாதார நிலையங்களிலும் தடுப் பூசிகளைப் போடவேண்டும்,15 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக்கப்பட வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ஆம்புலன்சுகளும்,ஜீப்களும் வழங்கப்பட வேண்டும் .வட்டாரத்திற்கு இரண்டு மொபைல் கிளினிக்குகள் தொடங்கவேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிவருகிறது.
இந்நிலையில் தமிழக அரசும் தடுப்பூசி வழங்குவதை ஆய்வு செய்ய ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் அரசு டாக்டர்கள் சங்கத் தலைமை தடுப்பூசி மர ணங்கள் பற்றி துளிகூட கவலைப்படாமல் பழைய முறையிலேயே தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என கோரிவருவது வேதனையளிக்கிறது. அரசு டாக்டர்கள் சங்கத் தலை மை சமூகப் பொறுப்பில்லாமல் செயல்படுவது டாக்டர்கள் மத்தியில் எரிச்சலை ஏற் படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான நிலையை அச்சங்கத் தலைமை உடன டியாகக் கைவிடவேண்டும்.
அரசுப்பணியாளர்களுக்கான நலக்காப்பீட்டுத்திட்டத்தை ஸ்டார்கெல்த் அண்டு அலைடு இன்சூரன்ஸ் மற்றும் ஐசிஐசிஐ லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் மூலம் வழங் குவதை கைவிட்டு பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் வழங்க வேண்டும்.
தமிழக அரசு டாக் டர்களின் ஊதியத்தை உடனடியாகக் கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல் உயர்த்தி வழங்க வேண்டும்.ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்து தற்பொ ழுது காலமுறை ஊதியம் பெற்றுவரும் டாக்டர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை வழங்கி அரசு ஒதுக் கீட்டின் கீழ் முது நிலை மருத் துவக் கல்வி யில் சேர வழிகாண வேண்டும் . கட்டாய சேவைத் திட்டம் என்ற பெயரில் மருத் துவக் கல்வியை ஐந்தரை ஆண்டுகளிலி ருந்து ஆறரை ஆண் டுகளாக உயர்த் தக் கூ டாது .32 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மருத்துவர்களின் பணியிடங்களை ஒழித்துக் கட்ட மத்திய மக்கள் நல் வாழ்வுத்துறை முயலக்கூடாது.
பயிற்சி மருத்துவர்கள் பட்ட மேற் படிப்பு மாணவர்களின் பயிற்சி கால ஊதி யத்தை உயர்த்த வேண்டும். டாக்டர்களின் உயிர்- உடமைகளுக்கு பாதுகாப்பு வழங்க ஆந்திர அரசு போல் சட்டம் கொண்டு வரவேண்டும்.அரசு மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்த வேண் டும்.கட்டண வார்டு களை துவக்கி ஏழைகள் இலவ சமாக மருத்துவ வசதி பெறும் உரிமையை பறிக்கக் கூடாது.
50 வயதுக்குமேல் முதுநிலைமருத் துவக்கல்வி பயில தடை கூடாது. தற்காலிக மாக பணியாற்றி வரும் முது நிலை மருத்துவர்களுக்கும்,பல் மருத்துவர்களுக்கும் டி.என்.பி.எஸ்.சி சிறப்பு தேர்வு நடத்தி பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும் .
நோய் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் குன்னூர் லூயிபாஸ்டர் நிறுவ னம்,கசவ்லி மத்திய தடுப்பூசி ஆராய்ச்சி நிறுவனம்,சென்னை கிண்டி பி.சி.ஜி நிறுவனம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு மூடக்கூடாது.
மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி யினருக்கான 27 விழுக்காடு இடஒதுக் கீட்டில் வசதிபடைத்தோருக்கு இடஒதுக்கீடு இல்லை என்பதை நீக்க வேண் டும். தனியார் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
சுகாதாரத்துறையில் உள்ள மருத்துவ நிர்வாக அதிகாரிகளுக்கு கன்ஃப்பர்டு அய்.ஏ.எஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இப்படிக்கு,
உண்மையுள்ள,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.யி
உண்மையுள்ள,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.யி