DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org

தேதி :23.05.08
இதழ்-செய்தி மருத்துவர்கள் மேற்பார்வையில் தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிட முயன்றால் போராட்டம் நடத்தப்படும்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் எச்சரிக்கை.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி தட்டம்மை தடுப்பூசி போட்டதில் 4 குழந்தைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் பலியான தற்கு மனிதத் தவறே காரணம். கரைப்பானை மாற்றி போட்டதாலேயே இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது. நேர்மையான முறையில் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்.
மனிதத் தவறுகள் மூலம் இதுபோன்ற மரணங்கள் நடைபெறாமல் தடுத் திட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவ மனைகளிலும் தடுப்பூசிகளை மருத்துவர்கள் மேற்பார்வையில் போடும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்திவருகிறது.எல்லோருக்கும் தடுப்பூசிகள் வழங்கப் படுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் பாதுகாப்பாக வழங்குவதும் முக்கியம். எனவே, அரசின் இத்திட்டம் வரவேற்கத்தக்கது.இத்திட்டத்தை மேம்படுத்திட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதலாக மருத்துவர்களையும், குழந்தைகள் நல மருத்துவர்களையும் நியமிக்க வேண் டும். துணை சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசிகளைப் டாக்டர்கள் மேற் பார்வையில் போடவேண்டும். தொலைதூர கிராமப்புறங்களுக்கு நேரடியாகச் சென்று மருத்துவக் குழுவினர் தடுப்பூசி போடும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ஆம்புலன்சுகள்,ஜீப்புகள் வழங்க வேண்டும். வட்டாரத்திற்கு இரண்டு மொபைல் கிளினிக்குகள் தொடங்க வேண்டும். படிப்படியாக 15 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக்க வேண்டும். தடுப்பூசி மருந்து குப்பிகளில் மாசு-நச்சு கலப்பு ஏற்படுவதை தடுத்திட மல்டிடோஸ் குப்பிகளை வழங்குவதற்கு பதிலாக சிங்கிள் டோஸ் குப்பிகளை வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரத்திற்கு ஒருநாள் தடுப்பூசி வழங் குவதை தேவைப்படின் மூன்று நாளாக அதிகரிக்கவேண்டும்.இதர அரசு மருத்துவ மனைகளில் வாரத்தில் ஆறு நாட்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். தடுப் பூசி போட வரும் தாய் மார்களுக்கு போக்குவரத்து செலவை வழங்கு வதுடன், கூலி உழைப்பை நம்பியுள்ள தாய்மார்களுக்கு ஒரு நாள் வறு வாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் ரூபாய் 150 வழங்க வேண்டும். தடுப்பூசி போட்டபின் காத்திருக்கும் நேரத்தில் தாய்மார்களுக்கு உணவும், அடிப்படை நலவாழ்வுக் கல்வியும் வழங்க வேண்டும். இதற்கு தொலைக் காட்சி பெட்டிகளையும், சுகாதார விழிப்புணர்வு குறுந்தகடுக ளையும் பயன் படுத்த வேண்டும்.பெண் கரு-சிசு கொலைக்கு எதிரான கருத்துக்களையும் ,பாலின சமத்துவத்தையும் ,தாய்பால் வழங்குவதின் முக்கியத்துவம் போன் றவற்றையும் விளக்க வேண்டும் போன்ற யோசனை கள் சமூக சமத்துவத் திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் முன் வைக்கப் பட் டுள்ளது.இவற்றில் பலவற்றை அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந் நிலையில் இத்திட்டத்தை சில அமைப்புகள் சுய நல நோக்கத் துடன் எதிர்க்கின்றன.தங்கள் நலனை பொதுமக்கள் நலனாக மாற்ற முயல் கின்றன.டாக்டர்கள் மேற்பார்வையில் தடுப்பூசி போடும் திட்டத்தை நேரடி யாக எதிர்க முடியாமல் மறைமுகமாக எதிர்த்திட முனைகின்றன. பாதுகாப் பாக தடுப்பூசிகளை போட உறுப்படியான மாற்று யோசனைகளைக் கூறா மல் பழைய முறையே தொடரவேண்டும் என்ற உள்நோக்கோடு தவறான காரணங்களை அள்ளி வீசி வருகின்றன.ஆடு மாடுகளுக்கு ஊசிபோடுவது போன்ற பாதுகாப்பற்ற பழைய முறை மக்களுக்கும் ,சமூக முன்னேற்றத் திற்கும் எதிரானது. தங்களது தவறான நிலைபாட்டை அவ்வமைப்புகள் கைவிட வேண்டும்.
நிர்பந்தத்திற்கு பணிந்து மருத்துவர்கள் மேற்பார்வையில் தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிட தமிழக அரசு முயன்றால் மக்கள் நலன் கருதி அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்படும்.

இப்படிக்கு,
உண்மையுள்ள,
டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்
பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்
பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்