Doctors' Association for Social Equality

"Study! Service!! Struggle!!!"

All Messages

Search Our Site



DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :26.05.08
இதழ்-செய்தி

மருத்துவர்கள் மேற்பார்வையில் தடுப்பூசி போடும் திட்டம் குறித்த தமிழக முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

அரசுப்பணியாளர்களுக்கான நலக்காப்பீட்டுத்திட்டத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்குவது வருத்தமளிக்கிறது.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவ மனைகளிலும் தடுப்பூசிகள் மருத்துவர்கள் முன்னிலையில் போடப்படும் திட்டம் தொடரவேண்டும் எனவும்,மருத்துவனைகளை திறம்பட நிர்வகித்திட மருத்துவர்களின் நிர்வாகத்திறனை மேம்படுத்த பயிற்சியளிக்க வேண்டும் எனவும்

தமிழக முதல்வர் அறிவித்திருப்பதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்கிறது. சுகாதாரத்துறையில் உள்ள திறமையான மருத்துவ நிர்வாக அதிகாரிகளுக்கு கன்ஃப்பர்டு அய்.ஏ.எஸ் வழங்க வேண்டும்.

மருத்துவர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் உடனடியாக 565 மருத்துவர்களை நியமித்திட உத்தரவிட்டிருப்பது பாராட்டத்தக்கது.ஏற்கனவே தற்காலிக மாக பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கும்,புதிதாக நியமிக்கப்பட உள்ள மருத்துவர்களுக்கும் டி.என்.பி.எஸ்.சி சிறப்பு தேர்வு நடத்தி பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும் .

அரசுப்பணியாளர்களுக்கான நலக்காப்பீட்டுத்திட்டத்தை ஸ்டார்கெல்த் அண்டு அலைடு இன்சூரன்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதும்,ஆம்புலன்ஸ் சேவையை இ.எம்.ஆர்.ஐ என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதும், வருத்தமளிக்கிறது. நலக்காப்பீட்டுத்திட்டத்தை பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் வழங்க வேண்டும்.ஆம்புலன்ஸ் சேவையை மருத்துவத்துறை அல்லது தீயணைப்புத்துறை மூலம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வரை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு,

உண்மையுள்ள,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.யி

0 comments

Post a Comment

Flash News - Exam Alerts

Get DASE Announcements and News by SMS

Our Site is seen from

Regular Readers