DASE condemning the Srilankan Medical Association's objection of the Indian Medical Team's visit to Treat Tamils who were injured
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
________________________________________________________________________________
இதழ்ச் செய்தி
தேதி :16.03.09
இலங்கைக்குச் சென்றுள்ள இந்திய மருத்துவக் குழுவுக்கிற்கு இலங்கை மருத்துவச் சங்கம் எதிர்ப்பு.சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம்.
இது குறித்து இச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு சிகிச்சை அளித்திட இந்திய அரசு மருத்துவக் குழுவை அனுப்பியுள்ளது.போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் தற்காலிக மருத்துவ மனையை நிறுவி இக்குழுவினர் போரினால் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு மருத்துவம் செய்ய உள்ளனர்.இந்நிலையில் இந்திய மருத்துவக்குழு இலங் கைக்கு சென்றுள்ளதற்கு இலங்கை மருத்துவச் சங்கம் எதிர்ப்பு தெரிவித் துள்ளது.
இலங்கை மருத்துவக் கவுன்சிலில் பதிவு பெறாத இந்திய மருத்துவர்கள் இலங்கை எல்லைகளுக்குள் சிகிச்சை அளிக்கக் கூடாது,இது சட்டத்துக்குப் புறம்பானது என்றும் இந்திய டாக்டர்கள் தவறான சிகிச்சை அளித்து நோ யாளிகள் பாதிக்கப்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? இலங்கையில் போதிய மருத்துவர்கள் இருக்கும் பொழுது இந்திய மருத்துவக்குழு எதற்காக என்றெல்லாம் பல்வேறு வியாக்கியானங்களையும்,வினாக்களையும் எழுப்பி இந்திய மருத்துவக்குழு இலங்கைக்கு சென்றுள்ளதை இலங்கை மருத்துவச் சங்கம் எதிர்ப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.சிங்கள இன வெறி இலங்கை ராணுவத்தை மட்டுமின்றி மருத்துவர்களையும் ஆட்டிப் படைக்கிறது என்பது இலங்கை மருத்துவச் சங்கத்தின் செயல்பாட்டிலிருந்து உறுதியாகிறது.இனம்,மொழி ,நிறம்,மதம்,பாலினம்,ஏழை-பணக்காரன் போன்ற எந்த பாகுபாட்டிற்கும் உட்படாமல் நோயுற்ற மனிதர்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற ஹிப்போக்கிரட்டிக் உறுதி மொழியை மறந்துவிட்டு இனவெறியுடன் செயல்படும் இலங்கை மருத்துவச் சங்கம் சட்ட நெறிமுறை களைப்பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.சர்வதேச சட்டங்களுக்கும் ,மனிதநேயத்திற்கும் எதிராக இலங்கை ராணுவம் அப்பாவி மக்களை நாள் தோறும் கொன்று குவிப்பதையும்,மருத்துவமனைகளையும் ,மருத்துவ ஊழியர்களையும் ஏவுகணைகளால் தாக்குவதையும் கண்டிக்காத இலங்கை மருத்துவர்கள் சங்கம் சட்டம் பற்றி பேசுவது வேடிக்கையானது.
இலங்கையை சுனாமி தாக்கிய பொழுது ஏராளமான கியூபா நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் உடனடியாக சுனாமி பாதித்தப் பகுதிகளுக்குச் சென்று சிகிச்சையளித்தனர்.அவர்கலெல்லாம் இலங்கை மருத்துவக் கவுன்சிலில் பதிவு பெற்றா சிகிச்சையளித்தனர்? இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் நிர்மூலமாகிவிட்டன.மருந்துகளுக்கும்,பேன்டேஜ துணி போன்ற மருத்துவப் பொருட்களுக்கும்,மருத்துவ உபகரணங்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மருத்துவமனைகள் மரத்தடி நிழலிலும் , இடிந்து போன கட்டிடங்களிலும்தான் நடந்து வருகின்றன.பாம்பு கடியாலும்,குண்டு வீச்சால் ஏற்பட்டக்காயங்களாலும் ஏராளமானோர் இறந்துவிட்டனர்.போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இரண்டு லட்சம் மக்களுக்கு வெறும் 20 டாக்டர்களும்,ஆயிரம் மருத்துவ ஊழியர்களுமே உள்ளனர்.இந்நிலையில் இலங்கையில் போதிய மருத்துவர்கள் இருக்கிறார்கள் என இலங்கை மருத்துவச் சங்கம் கூறுவது அதன் சாடிஸ்ட் மனப்பான்மையையே காண்பிக்கிறது.
இலங்கையைச் சேர்ந்த ஏராளமான சிங்கள மருத்துவர்களும், அமைச்சர் களும்,அரசியல் தலைவர்களும்,வசதிபடைத்தோறும் பல்வேறு நோய்களுக்கு சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு வந்து சிகிச்சை பெற்று குணமடைந்து செல்கின்றனர்.இந்நிலையில் இந்திய மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு விடுவார் கள் எனக்கூறுவது இத்திய மருத்துவர்களை இழிவுப்படுத்துவதாகும்.தமிழ் மக்களுக்கு மருத்துவ உதவிகளை செய்திடவும்,போரினால் பொதுமக்கள் இறப்பதை தடுத்திடவும் எதையும் செய்யாது,தமிழ்இன ஒழிப்பிற்கு ஏதுவாக தமிழ் கர்ப்பிணிப் பெண்களுக்கு கட்டாயக் கருக்கலைப்பு செய்திட துணை போகும் இலங்கை மருத்துவர்கள் சங்கம் இந்திய மருத்துவர்கள் சிகிச்சை யளிப்பதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுவிடுவார்கள் என்பது ஆடுநனை கிறதே என ஓநாய் கவலைப்பட்டக் கதையாக உள்ளது. எனவே,இலங்கை மருத்துவச் சங்கம் தனது இனவெறிப் போக்கை கைவிடவேண்டும்.தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் இந்திய மருத்துவக் குழுவுடன் இணைந்து மனிதநேய அடிப்படையில் செயல்பட முன்வர வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் இலங்கை மருத் துவர்கள் சங்கத்தைக் கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு,
(டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்)
பொதுசெயலாளர்,டி.ஏ.எஸ்.ஈ