DASE's PRESS RELEASE welcoming the Medical council of India's decision against the compusory Rural posting of Doctors
DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்:daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: ÷‹: www.daseindia.org
________________________________________________________________________________
இதழ்ச் செய்தி தேதி :1.03.09
மருத்துவர்களின் கட்டாய சேவைத் திட்டத்திற்கு இந்திய மருத்துவக்கவுன்சில் எதிர்ப்பு.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்பு.
இது குறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள பத்திரிக்கை செய்தி.
எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்த டாக்டர்கள் முதுநிலை மருத்துவப் படிப்பு களில் சேர விண்ணப்பிக்க வேண்டுமெனில் ஓராண்டு கிராமப்புற சேவை யை முடித்து அதற்கான சான்றிதழ்களை இணைக்க வேண்டுமென மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்திருந்தது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத் திடும் வகையில் உரிய விதிமுறை களை கொண்டுவருமாறு இந்திய மருத் துவக் கவுன்சிலுக்கு பரிந்து ரைத்திருந்தது.இந்நிலையில் இந்திய மருத் துவக் கவுன்சிலின் தலைவர் டாக்டர் கேத்தன் தேசாய் மருத்துவப் பயிற்சிக் காலத் தை அதிகரிக்கும் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இத்திட் டத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ளார். மருத்துவக்கவுன்சிலின் தலைவர் டாக்டர் கேத்தன் தேசாயின் கருத்தை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்கிறது.
இப்படிக்கு,
(டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்)
பொதுச் செயலாளர்,டி.ஏ.எஸ்.ஈ