DASE's PRESS RELEASE opposing the Govt Decision to appoint Doctors on Contract Basis which is against the election manifesto given by the same Govt
DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்:daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
________________________________________________________________________________
இதழ்ச் செய்தி தேதி :28.2.09
ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள் பணிநியமனம்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம்.
இது குறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள பத்திரிக்கை செய்தி.
ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்களை பணிநியமனம் செய்வதை மத்திய-மாநில அரசுகள் கைவிடவேண்டும் என நீண்டகாலமாக சமூக சமத்துவத் திற்கான டாக்டர்கள் சங்கம் போராடிவருகிறது.இதன் விளைவாக தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்களை பணி நியமனம் செய்யமாட்டோம் என அறிவித்தது. இந் நிலையில் தமிழக த்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள 110 ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு டாக்டர்களையும்,இதர பணியாளர்களையும் ஒப்பந்த அடிப்படையில் நிய மித்திட மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் தமிழக அரசு 27.01.09 அன்று ஆணை (G.O.(MS)No.28) பிறப்பித்துள்ளது.தேர்தல் வாக்குறுதிக்கு எதிராக ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்களை பணிநியமனம் செய்வது வருந்தத் தக்கது. ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்களை பணிநியமனம் செய்வதை உடனடியாக கைவிட்டு ,நிரந்தர அடிப்படையில் மட்டுமே பணிநியமனம் செய்ய வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு,
(டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்)
பொதுச் செயலாளர்,டி.ஏ.எஸ்.ஈ