DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
________________________________________________________________________________
இதழ்ச் செய்தி
தேதி :25.2.09
பயிற்சி மருத்துவர்கள் - முதுநிலை மருத்துவ மாணவர்களின்
பயிற்சிக்கால ஊதியத்தை உயர்த்திடுக.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள்.
இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.
பயிற்சி மருத்துவர்கள் பட்டமேற்படிப்பு மாணவர்களின் பயிற்சிக்கால ஊதியம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிகக் குறைவாக உள்ளது.இதை உயர்த்திட வேண்டும் என நீண்ட காலமாக கோரிவந்தபோதிலும் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில்,பயிற்சிகால ஊதியத்தை உயர்த்த வேண்டுமென வலியுறுத்தி 24.2.09 அன்று தமிழகம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள்- பட்டமேற்படிப்பு மாணவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொண்டனர்.எனவே, உடனடியாக பயிற்சி மருத்துவர்கள் பட்டமேற்படிப்பு மாணவர்களின் பயிற்சிகால ஊதியத்தை உயர்த்திட வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு,
(டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்)
பொதுசெயலாளர், டி.ஏ.எஸ்.ஈ