DASE'S Press release strongly condemning the Ragging atrocities and Murdering in the name of Ragging
DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43 தொலைபேசி : 044-22642561 தொலைநகல் : 044-22642562 கைபேசி : 99406 64343
மின்அஞ்சல்:daseindia@gmail.com,dasetn@yahoo.com
இணையதளம் www.daseindia.org
________________________________________________________________________________
இதழ்ச் செய்தி
தேதி: 11.03.09
ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவன் மரணம்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம்.
இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர்
டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.
நாடு முழுவதும் கல்லூரிகளில் ராகிங் என்ற கொடுமையான பழக்கம் மாணவர்களிடையே இருந்து வருகிறது.குறிப்பாக மருத்துவக் கல்லூரிகளில் அதிகமாக இருந்துவருகிறது.இதனால் புதிதாக கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் கடும் துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்.நாவரசு என்ற மாணவர் சில ஆண்டுகளுக்கு முன்னால் ராகிங்கால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திரபிரசாத் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு பயின்ற மாணவர் அமன் கச்சுரு ராகிங் என்ற காட்டுமிராண்டித்தனத்தால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடுஞ்செயலை சமூக சமத்திற்கான டாக்டர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.ராகிங்கை தடுப்பதற்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் எடுக்க வேண்டுமென சமூக சமத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.யி.