DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43 தொலைபேசி : 044-22642561 தொலைநகல் : 044-22642562 கைபேசி : 99406 64343
மின்அஞ்சல்: daseindia@gmail.com,dasetn@yahoo.com
இணையதளம் www.daseindia.org
________________________________________________________________________________
தேதி :20.03.09
பெறுநர்
உயர் திரு செயலாளர் அவர்கள்,
செலக்ஷன் கமிட்டி,
முதுநிலை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைப் பிரிவு,
மருத்துவக்கல்வி இயக்குனரகம்,கீழ்பாக்கம்,சென்னை-10,
தமிழ்நாடு .
மரியாதைக்குரிய அய்யா,
(பொருள்- கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோருதல் தொடர்பாக)
எங்கள் சங்கத்தின் கீழ்கண்ட கோரிக்கைகளை ஏற்று நடைமுறைப்படுத்து வதற்காக தங்களது மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.
1.முதுநிலை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வில் வழங்கப்படும் கிராமப்புற சேவைக்கான மதிப்பெண்ணை எதிர்த்து சிலர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.இவ்வழக்கு விசாரணை ஏப்ரல் 2 ஆம் தேதி மீண்டும் வருகிறது. எனவே,கிராமப்புறங்களில் சேவை செய்யும் மருத்துவர்களின் நலன்கருதி உடனடியாக கவுன்சிலிங்கை நடத்திட வேண்டுகிறோம்.
2.டி.என்.பி.எஸ்.சி மூலம் பணி அமர்த்தப்பட்டவர்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயிலாம் என்ற விதிமுறையை நீக் கிவிட்டு ,எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டாலும் அவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயில வாய்ப்பளிக்க வேண்டும்.
3.நீலகிரி மாவட்டத்தில் ஓராண்டு சேவை முடித்த உடனேயே அரசு டாக்டர் களுக்கு அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயில வாய்ப்பளிக்க வேண்டும்.
4. மத்திய-மாநில அரசு மருத்துவர்களுக்கும்,ஈ.எஸ்.ஐ, ரயில்வே உள்ளிட்ட அரசு மற்றும் பொதுத்துறை மருத்துவர்களுக்கும் முதுநிலை மருத்து வக்கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.
5.முதுநிலை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிப்பதோடு, ஆன் -லைன் கவுன்சிலிங் வசதியை ஏற்படுத்திட வேண்டும்.நுழைவுத் தேர்வு முடிந்த உடன் விடைத்தா ளின் கார்பன் நகலை தேர்வு எழுதியவருக்கு வழங்குவதோடு, அன்று மா லையே இணைய தளத்தில் சரியான விடைகள் அடங்கிய ஆன்சர் கீ யை (Answer key) வெளியிட வேண்டும்.
6.முதுநிலை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கையில் இவ்வாண்டே அருந்ததியருக்கான உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவேண்டும்.
7.சென்ற ஆண்டு முதுநிலை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கையில் முஸ்லீம்களுகான உள்ஒதுக்கீடு 2.5 விழுக்காடே நடைமுறைப்படுத்தப் பட் டுள்ளதாக கூறப்படுகிறது.எனவே இவ்வாண்டு முழுமையாக 3.5 விழுக் காட்டை வழங்கிட வேண்டும்.
8.முதுநிலை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு உரிமை பெற்ற அரசு டாக்டர்களுக்கு கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 40 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்யவேண்டும்.அரசு டாக்டர்களுக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படும் வரை கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை படிப்படியாக கடந்த காலத்தில் குறைத்ததுபோல்,இப்பொழுது சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் குறைப்பதுபோல் குறைக்க வேண்டும்.
9. இடஒதுக்கீடு உரிமை பெற்ற அனைத்து டாக்டர்களுக்கும் கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 40 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது சமூக நீதிக்கு எதிரானது. எஸ்.சி/.எஸ்.டி மருத்து வர்கள் கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 30 விழுக்காடாக குறைக்கப்பட வேண்டும்.மேலும் ஒரு போட்டித்தேர்வில் கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்
கப்படுவது சரியல்ல.எனவே குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்படு வதை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும்.
10. முதுநிலை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கையில் அரசு டாக்டர் களுக்கு அதிகப்பட்சமாக வழங்கப்படும் சர்வீஸ் மதிப்பெண் 10 மதிப்பெண் ணோடு,எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தப்பிறகு ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு மதிப்பெண்வீதம் அதிகப்பட்சமாக வழங்கப்படும் எக்ஸ்பீரியன்ஸ் மதிப்பெண் 10 மதிப்பெண்ணையும் தனித்தனியாக சென்ற ஆண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் வழங்கியது போல் வழங்க வேண்டும்.
11. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு (ALL INDIA QUOTA) ) முறையை ரத்து செய்திட வேண்டும். இம் முறை நீடிக்கும் வரையில் அதில் மத்திய-மாநில அரசு மருத்துவர்களுக்கும், ஈ.எஸ்.ஐ, ரயில்வே மற்றும் பொதுத்துறை மருத்துவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.
மிக்க நன்றி.
இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.யி.
March 20, 2009 at 8:10 PM
Dear Sir,
Peace be upon you.
The memorandum sent to the selection committee by DASE is worthful in all aspects.Pl try to make the Councelling a TRANSPARENT one,by keeping a TV monitor outside the councelling room which was the case for many years.
Regarding the muslim quota,many misappropriation happened last year.
I shall mention them as below:
1. If a candidate get a good rank and opt for a seat in open competition, no seat from BCM shall be reduced. But the reverse happened.
2. Some of the rare PG seats like MD(radio diagnosis),MS(Ortho) were NOT allotted in ROTATION basis last year. If this situation continues no muslim doctor can achieve this speciality in any point of time save those who get OC seat.
3. Those who were selected in BCM quota were allotted seats in NEW budding,medical colleges like Tiruchy and NOT in Higher educational centres in Chennai.
4. The 200 point roaster was not PROPERLY followed.
Thanks.
With regards,
Dr.J.Mohideen MBBS,MS,
Kanyakumari medical college