DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
______________________________________________________________________________
இலங்கையில் தமிழர் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மீது ஏவுகணை தாக்குதல்கள்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம்.
இது குறித்து இச் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.
இலங்கையில் ராணுவத் தாக்குதல்கள் நடைபெரும் தமிழர் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மீது ஏவுகணை தாக்குதல்கள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.புதுக்குடியிருப்பு மருத்துவமனையை குண்டு வீசி தாக் கியதால் அம்மருத்துவமனை செயலிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்க னவே கடந்த மாதம் கிளிநொச்சி மருத்துவமனையும் தாக்கப் பட்டது.
இந்நிலையில்,போர்நடை பெற்றுவரும் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரே மருத்துவமனையான உடையார்கட்டு மருத்துவமனையும் தற்பொழுது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.இதில் ஏழு நோயாளிகள் கொல்லப்பட்டுள் ளனர்.27 பேருக்கும் மேல் படுகாயமுற்றுள்ளனர்.மருத்துவமனை தாக்குதல் களில் செவிலியர்களும் இறந்துள்ளனர்.மருந்துகளும்,மருத்துவ உபகரணங் களும் அழிக்கப்பட்டுள்ளன.இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதியுறுகின்றனர். மருத்துவமனைகள் மீதான இதுபோன்ற தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படும் இலங்கை அரசை சர்வதேச டாக்டர்கள் சமூகமும் கண்டிக்க வேண்டும்.
இப்படிக்கு,
(டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்)
பொதுசெயலாளர்,டி.ஏ.எஸ்.ஈ