(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
இதழ்-செய்தி
அரசு ஒதுக்கீட்டு மாணவர்களிடம் தனியார் கல்வி நிறுவனங்கள் நேரடியாகக் கட்டணம் வசூலிப்பதை தடை செய்ய வேண்டும்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.
அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி களில் சேரும் மாணவர்களிடம் அரசுக்குழு நிர்ணயித்த கட்டணத்தைவிட பல மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்ப டுகிறது.பேருந்துக் கட்டணம், கம்பியூட்டர் கட்டணம், உணவுக்கட்டணம் என பல்வேறு வகைகளிலும் கட் டணக் கொள்ளை நடைபெறுகிறது. இதைத் தடுத்திட மாணவர்களிடம் தனி யார் கல்வி நிறுவனங்கள் நேரடியாகக் கட்டணம் வசூலிப்பதை தடை செய் யவேண்டும்.அரசுக்குழு நிர்ணயித்த கட்டணத்தை நேரடியாக சம்பந்தப் பட்ட கல்வி நிறுவனங்களின் பெயரில் மருத்துவக்கல்வி இயக்குனரகத்திலோ அல்லது அண்ணாபல்கலைக்கழகத்திலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ மாணவர்கள் செலுத்திடும் நடைமுறையை கொண்டுவர வேண்டும்.இதைத் தவிர கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கல்விக் கட்டணத்தை மேலும் உயர்த் தக்கூடாது என நீதிபதி பாலசுப்பிரமணியன் குழுவை சமூக சமத்துவத்திற் கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது .
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.ஈ