INDIAN DOCTORS FOR PEACE AND DEVELOPMENT
                          TAMILNADU  CHAPTER
                                             (Regd No:493/2002)
An Affiliate of International Physicians ForThe Prevention Of Nuclear War  (IPPNW) -                                Recipient of Nobel Peace Prize in 1985                                      
சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான
இந்திய டாக்டர்கள் சங்கம் தமிழ்நாடு பிரிவு.
#41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: ™: daseindia@gmail.com                         www.daseindia.org
________________________________________________________________________________
இதழ்ச் செய்தி
தேதி :15.2.09
இலங்கை தமிழ் கர்ப்பிணிப் பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பு.இலங்கை ராணுவத்தின் கொடுஞ்செயல்.
சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான இந்திய டாக்டர்கள் சங்கம் கண்டனம்.
இது குறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.
வன்னிப் பகுதியிலிருந்து வெளியேறி வவுனியாவிற்கு வரும் கருவுற்றிருக்கும் தமிழ் தாய்மார்களை நிர்ப்பந்தப்படுத்தி கருக்கலைப்புக்கு உட்படுத்துமாறு இலங்கை ராணுவ உயர் அதிகாரிகள் வவுனியா மருத்து மனை உயர் மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.சிங்கள மொழி படிக்கத் தெரியாத தமிழ்ப் பெண்களிடம் சிங்கள மொழியில் உள்ள ஒப்புதல் படிவங்கள் மூலம் ஏமாற்றி அனுமதி பெற்று கருக்கலைப்பு செய்யப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.இலங்கை ராணுவத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான இவ்வெறிச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உலக நல நிறுவனம் இச்சம்பவம் குறித்து உரிய முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.குற்றவாளிகள் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தண்டிக்கப்படவேண்டும்.
பலர் உயிர் இழக்க காரணமான முதியோர் இல்லம் மீதான இலங்கை ராணுவத் தாக்குதல்களும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இப்படிக்கு
(டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்)
 
 Posts
Posts
 
