Doctors' Association for Social Equality

"Study! Service!! Struggle!!!"

All Messages

Search Our Site

INDIAN DOCTORS FOR PEACE AND DEVELOPMENT
TAMILNADU CHAPTER
(Regd No:493/2002)
An Affiliate of International Physicians ForThe Prevention Of Nuclear War (IPPNW) -
Recipient of Nobel Peace Prize in 1985

சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான
இந்திய டாக்டர்கள் சங்கம் , தமிழ்நாடு பிரிவு.

# 41-Chavady street, Pallavaram, Chennai -43
Ph: 044 22643561, 22642790 Fax: 044 22643562 Mobile: 99406 64343 , 9444183776
email: idpd04@yahoo.com , daseindia@gmail.com , web Site: www.idpd.org

----------------------------------------------------------------------------------------------------------------
இதழ்ச் செய்தி
தேதி: 11.2.09
காதலர்களை தாக்கும் சாதிய- மதவெறி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக.

காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பாதுகாப்பு வழங்கிடுக.

சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான இந்திய டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.

இது குறித்து இச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர்.நி.ஸி .ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சாதிய அமைப்புமுறை நீடித்துவருகிறது.ஆதிக்க சாதியினரின் சாதி வெறியால் ஒடுக்கப்பட்ட சாதியினர் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.தீண்டாமை,சாதிய பாகுபாடு போன்றவற்றால் விலங்குகளைவிட கேவலமாக நடத்தப்படும் கொடுமை நிலவுகிறது.
பிறப்பால் நிர்ணயிக்கப்படும் சாதி, அகமணத் திருமண முறை என்ற ஒரே சாதிக்குள்ளேயே செய்யப்படும் திருமணமுறையால் நீடித்து நிலைத்து வருகிறது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கும்,சமூக நல்லிணக்கத்திற்கும் அமைதிக்கும் பெரிய சவாலாக இன்றளவும் சாதி உள்ளது.தீண்டாமையையும் அதற்கு காரணமான சாதியையும் ஒழிப்பது காலத்தின் அவசியமாகும்.பல்வேறு முற்போக்கு அரசியல்-சமூக இயக்கங்கள் சாதி ஒழிப்பை தங்கள் லட்சியமாக கொண்டுள்ளன.தீண்டாமை -சாதி ஒழிப்பிற்கு நிலச்சீர்திருத்தம்,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி -வேலைவாய்பில் இட ஒதுக்கீடு போன்ற சமூக பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம்.அதே போன்று சாதி நீடிப்பதற்குக் காரணமான அகமணத்திருமண முறைக்கு மாற்றாக கலப்புத் திருமணங்களும்,சாதிமறுப்புத் திருமணங்களும் ஊக்கப்படுத்தப்படுவது அவசியம்.

கலப்புத் திருமணங்கள் பெரும்பாலும் காதல் திருமணங்களாகவே அமைகின்றன.பெற்றோரால் நடத்தப்படும் ஏற்பாட்டுத் திருமணங்களில் சாதி பார்க்கப்படுவதும்,வரதட்சணை கோரப்படுவதும் மிக அதிக அளவில் உள் ளன.தனது வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யும் ஐனநாயக உரிமையும் இளைய தலைமுறைக்கு ஏற்பாட்டுத் திருமணங்களில் மறுக்கப்படுகிறது. ஆரோக்கியமான எதிர்கால சந்ததியைப் பெற்றிட கலப்புத் திருமணங்களே மருத்துவ ரீதியாகவும் சிறந்தது.

ஆனால்,இத்தகைய திருமணங்களால் சாதிய -வர்ணாசிரம தர்மமுறை தகர்ந்து விடுமோ என்ற அச்சத்தால் பிற்போக்கு மத வெறிசக்திகள் காதல்-கலப்பு மணங்களை எதிர்க்கின்றன.காதலர்களையும் தாக்குகின்றன.
சாதியற்ற சமூகத்தை படைத்திட ,காதல்-கலப்புமணங்களுக்கு எதிராக செயல்படும் சக்திகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.காதலர் தினத் தன்று காதலர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என மத்திய -மாநில அரசுகளை சமாதானம் மற்றும் முன்னேற் றத்திற்கான இந்திய டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது..

இப்படிக்கு

(டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்)
பொதுச் செயலாளர்
சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான
இந்திய டாக்டர்கள் சங்கம்.

0 comments

Post a Comment

Flash News - Exam Alerts

Get DASE Announcements and News by SMS

Our Site is seen from

Regular Readers