DASE PRESS RELEASE CONDEMNING THE BUDGET WHICH IS INCREASING THE ALLOTMENT TO DEFENSE INSTEAD TO HEALTH DEPT
DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
________________________________________________________________________________
இதழ்ச் செய்தி
தேதி :16.2.09
மத்திய இடைக்கால பட்ஜட்டில் மக்கள் நல்வாழ்வுத்துறை புறக்கணிப்பு.பாதுகாப்புத்துறைக்கு கூடுதல் ஒதுக்கீடு.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம்.
இது குறித்து இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜட்டில் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ஆண்டுதோறும் அதிகரிக்கப்பட வேண்டிய பத்து விழுக்காடு கூடுதல்நிதி கூட ஒதுக்கப்படவில்லை.கடந்த 2008-09 ஆண்டு தேசிய ஊரக நலவாழ்வு இயக்கத்திற்கு 12 ஆயிரத்து 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.அது முந் தைய ஆண்டைவிட (2007-08) 15 விழக்காடு அதிகம்.இந்த இடைக் கால பட்ஜட்டில் தேசிய ஊரக நலவாழ்வு இயக்கத்திற்கு 12 ஆயிரத்து 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.அதாவது வெறும் 50 கோடி ரூபாய் மட்டுமே கூடுத லாக ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ராணுவத்திற்கு ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து அறுநூறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால்,இவ்வாண்டு ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 703 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.அதாவது 34.18 விழுக்காடு அதிகரிக்கப் பட்டுள்ளது.மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு வழங்கப்படவேண்டிய நிதி ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.இது வன் மையாக கண்டிக்கத்தக்கது.
மும்பை பயகரவாத நிகழ்வை காரணம் காட்டி இவ்வாறு ராணுவத் திற்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது.நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என் றாலும்,ராணுவத்திற்கான நிதியை அதிகப்படுத்துவதாலும்,ராணுவத்தைப் பலப்படுத்துவதாலும் மட்டுமே இந்தியாவின் பாதுகாப்பை உத்தரவாதப் படுத்திவிட முடியாது.பாபர் மசூதி இடிப்பு,மதச்சார்பின்மையை காக்கத் தவறியது,முஸ்லீம்களுக்கும் எதிரான நாடு போல் இந்தியாவை மாற்றியது,பாரம்பரியமான அணிசேரா வெளி உறவுக் கொள்கையை கை விட்டது , இந்தியாவை அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாற்றியது போன்றவை இந்தியாவை பல்வேறு அமைப்புகளும்,நாடுகளும் எதிரியாக கருதும் நிலையை ஏற்டுத்தியுள்ளது.இதுவே இந்தியாவின் பாதுகாப்புக் கும்,ஒற்றுமைக்கும்,ஒருமைப்பாட்டிற்கும் ,சமூக அமைதிக்கும் அச்சுறுத் தலாக மாறியுள்ளது.
தவறான கொள்கைகளை கைவிடாமல் ராணுவ பலத்தின் மூலம் மட்டு மே நாட்டை பாதுகாக்க நினைப்பதும் ,அதற்காக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதியை ராணுவத்திற்கு காவு கொடுப்பதும் வன்மையாக கண் டிக்கத்தக்கது. மக்களினின் நலவாழ்வை மேம்படுத்த பயன்பட வேண்டிய நிதி இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு ராணு வத் தளவாட உற்பத்தி நிறுவனங்களின் கல்லாப் பெட்டிகளை அடைய விருப்பது வருத்தமளிக்கிறது.மக்கள் நலனில் அக்கறை கொண்டோர் ராணு வத்திற்கு அதிகமாக நிதிஒதுக்கும் மத்திய அரசின் போக்கை எதிர்த்திட முன்வரவேண்டும்.
இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,
டி.ஏ.எஸ்.இ