DASE& IDPD' S Request to all the Medical & Paramedical students and staff to participate in the HUMAL RALLY for the safety of Elathamizhars on 17.3.09
INDIAN DOCTORS FOR PEACE AND DEVELOPMENT
TAMILNADU CHAPTER
(Regd No:493/2002)
An Affiliate of International Physicians ForThe Prevention Of Nuclear War (IPPNW) - Recipient of Nobel Peace Prize in 1985
சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான
இந்திய டாக்டர்கள் சங்கம் தமிழ்நாடு பிரிவு.
#41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்-daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org________________________________________________________________________________
________________________________________________________________________________
இதழ்ச் செய்தி
தேதி :13.2.09
பிப்ரவரி 17-மனிதச் சங்கிலியில்
மருத்துவ மாணவர்கள் -மருத்துவர்கள்
கலந்து கொள்ள வேண்டுகோள்.
இது குறித்து சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான இந்திய டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.
முல்லைத்தீவுப் பகுதியில் இலங்கை ராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித் துள்ளதால் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் ஏராளமாகக் கொல்லப்படுகின்றனர். மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.போதிய மருந்துப் பொருட் களும்,மருத்துவ வசதிகளும் இன்றி தமிழர்கள் அவதிப்படுகின்றனர்.
இன்னிலையில்,மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படும் இலங்கை அரசைக் கண்டித்தும்,போரை நிறுத்திட உரிய நடவடிக்கைகளை எடுத்திட மத்திய அரசை வலியு றுத்தியும், இனப்பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் அமைதி வழியில் அரசியல் தீர்வு காண ஐ.நா.சபை உரிய நடவடிக்கைகளை எடுத்திட வலியுறுத்தியும், ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 17.2.09 அன்று மாலை 4.00 மணி அளவில் நடைபெறும் மனிதச் சங்கிலியில் அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவியரும் ,அரசு மற்றும் தனியார் மருத்து வர்களும் பங்கேற்க வேண்டுமென சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான இந்திய டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு
(டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்)
பொதுசெயலாளர்,ஐ.டி.பி.டி