DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :27.06.08
இதழ்-செய்தி
டாக்டரைத் தாக்கிய வழக்கறிஞர்களை கைது செய்யக் கோரி பொன்னேரி அரசு மருத்துவமனை எதிரில் ஆர்ப்பாட்டம். சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர் G.R .ரவீந்திரநாத் தலைமையில் நடை பெற்றது.
இது குறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர்.G.R. ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் நந்தகுமார் அவர்களை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் ,மருத்துவர்கள் -மருத்துவத்துறை பணியாளர்களின் உயிர் மற்றும் உடமைகளை காத்திட ஆந்திர அரசு போல் சட்டம் கொண்டுவர வலியுறுத்தியும் 27.6. 08 காலை 11.00 மணிக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர் நி.ஸி .ரவீந்திரநாத் தலைமையில் பொன்னேரி அரசு மருத்துவமனை எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் ஏராளமான அரசு டாக்டர்கள் சங்கத்தினரும், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி 27.6. 08 காலை 7.30 முதல் 9.30 வரை தமிழகம் முழுவதும் வெளிநோயாளிகள் புறக்கணிப்பு போராட் டமும் நடைபெற்றது.இதிலும் இரண்டு சங்கங்களைச் சேர்ந்த டாக்டர்களும் பங்கேற்றனர்.அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து 29.6.08 மாலை நெல்லையில் நடைபெறும் பொதுக்குழுவிலும்,இதர சங்கங்களோடு கலந்து பேசியும் முடிவு செய்யப்படும்.
இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.ஈ
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.ஈ