DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :09.06.08
இதழ்-செய்தி
மருத்துவர்கள் மீது காவல் துறை தடியடி.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம்.
இது குறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர்.சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம்.
G.R. ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.
முது நிலை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் குளறு படிகளை தொடர்ந்து மருத்துவர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தடியடி சம்ப வத்திற்கு சமூக சமத்துவத்திற்கான டாக்கடர்கள் சங்கம் வன்மையான கண் டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.முது நிலை மருத்துவக்கல்வி தொடர் பான தெளிவான கொள்கை முடிவுகள் இல்லாததும்,அகில இந்திய ஒதுக் கீட்டு முறையை ரத்து செய்யாததும்,போதிய அளவில் முது நிலை மருத் துவக் கல்வி இடங்களை உருவாக்காததும், ஒரு சில பாடப்பிரிவுகளில் அனைத்து இடங்களையும் அரசு மருத்துவர்களுக்கு மட்டுமே வழங்கியதுமே இதற்குக் காரணம்.மத்திய -மாநில அரசுகளே இதற்கு முழு பொறுப்பேற்ப வேண்டும்.
சில பாடப் பிரிவுகளில் அனைத்து இடங்களையும் அரசு மருத்துவர் களுக்கு மட்டுமே ஒதுக்கியது சரியல்ல என்ற நீதி மன்றத் தீர்ப்பை உரிய முறையில் அமல்படுத்த வேண்டும்.உடனடியாக முது நிலை மருத்துவக் கல்வி இடங்களை அதிகரிக்க வேண்டும் .தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற் கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.ஈ
---[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.ஈ
மிகவும் அமைதியாக நடந்து கொண்டிருந்த சாலை மறியல் குறித்த புகைப்படங்கள். எந்த வித உந்துதலும் (provocation) இல்லாமல் தடியடி நடத்தப்பட்டது