DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :25.06.08
இதழ்-செய்தி
டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பாக சேவை செய்த டாக்டர்ளுக்கு பாராட்டு விழா - பாதுகாப்பாக தடுப்பூசிகள் போடுவதைக் குறித்த கருத்தரங்கம்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் வரும் ஞாயிறு (29.6.08) அன்று நெல்லையில் நடைபெறுகிறது.
இது குறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர்.G.R. ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் வரும் ஞாயிறு (29.6.08) அன்று நெல்லையில் நடைபெறுகிறது.
காந்தியவாதியும், சுதந்திரப் போராட்ட வீரரும்,மேற்கு வங்க முன் னாள் முதல்வருமான பி.சி.ராய் அவர்களின் பிறந்த தினமான ஜூலை 1 ஆம் தேதி(இறந்த தினமும் அதுவே) டாக்டர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சிறப்பாக மக்களுக்கு சேவை செய்த டாக்டர்களுக்கு பாராட்டுவிழாவும் -பாதுகாப்பாக தடுப்பூசிகளை போடுவது குறித்த கருத்தரங்கமும் வரும் 29.6.08 காலை 9.30 மணிக்கு திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது.
பாராட்டு விழாவிற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் த. அறம் தலைமைதாங்குகிறார். டாக்டர்கள் எம்.அருள்நம்பி, எஸ்.எம்.ஜி.முரு கதாஸ், எஸ் .ஆனந்த் முன்னிலை வகிக்கின்றனர்.டாக்டர் கே.சண்முகராஜா வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
நோய்தடுப்பு மற்றும் பொதுசுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் டாக்டர்.பி.பத்மனாபன், மருத்துவக் கல்வி முன்னாள் இயக்குனர்(திட்டம்) டாக்டர் ஜே.ஆர்.விஜயலெட்சிமி, சென்னை மருத்துவக் கல்லூரி இருதய வியல்துறை முன்னாள் தலைவர் டாக்டர் பி.சுகுமார் , சிவகாசி சுகாதா ரத்துறை துணை இயக்குனர் டாக்டர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பாக சேவை செய்தமைக்காகப் பாராட்டு பெறவுள்ளனர்.
நோய்தடுப்பு மற்றும் பொதுசுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் எஸ்.இளங்கோ , சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் நி. ஸி . ரவீந்திரநாத் , பொதுசுகாதாரத்துறை இணை இயக்குனர்கள் டாக்டர்கள் எஸ். அல்ஃபோன்ஸ் செல்வராஜ், எம். செந்த மிழன் ,கே.குழந்தைசாமி,துணை இயக்குனர்கள் டாக்டர்கள் கே.ஏ.மீராமுகை தீன், வி.சண்முகசுந்தரம், சங்க நிர்வாகிகள் டாக்டர்கள் தி.மோகன், பி.துரை, ஆர்.சுந்தர் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.டாக்டர் சி. சுகன்யா நன்றியுரையாற்றுகிறார்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து நடைபெறும் பாதுகாப்பாக தடுப்பூசிகள் வழங்குவது குறித்த கருத்தரங்கிற்கு சேலம் மருத்துவக் கல்லூரி குழந்தைகள் மருத்துவத்துறை பேராசிரியர் டாக்டர் கு. முத்துக்குமார் தலைமை தாங்கு கிறார். தேனி மருத்துவக் கல்லூரி குழந்தைகள் மருத்துவத்துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் டி. சிவக்குமரன், பொதுமருத்துவர்கள் டாக்டர்கள் எஸ்.ராஜேஷ்குமார்,எம்.ஜெகநாதபிரபு முன்னிலை வகிக்கின்றனர். டாக்டர். எம்.சுரேஷ்குமார் வரவேற்புரையாற்றுகிறார்.
திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.வினாயகம் கருத்தரங்கை துவக்கிவைக்கிறார்.நோய்தடுப்பு மற்றும் பொதுசுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் டாக்டர்.பி.பத்மனாபன், நோய்தடுப்பு மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் எஸ்.இளங்கோ, இணை இயக்குனர் எம்.செந்தமிழன், துணை இயக்குனர்கள் எஸ். பாலசுப்பிரமணியன், டி. மது சூதனன் ,எஸ். உமா டாக்டர் பி. 111நரேஷ் உள்ளிட்டோர் கருத்துரையாற்று கின்றனர்.டாக்டர் எம்.பசுபதி நன்றியுறையாற்றுகிறார். தமிழகம் முழுவதிலு மிருந்து ஏராளமான டாக்டர்கள் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள்.
இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.ஈ
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.ஈ