DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :28.09.08
இதழ்-செய்தி
முது நிலை மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டை பாதுகாத்திட மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். தமிழகம் முழுவதும் நாளை (செவ்வாயன்று) சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் நடைபெறும். சென்னையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்பு .
இது குறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள பத்திரிக்கை செய்தி.
முது நிலை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்காண அகில இந்திய நுழை வுத்தேர்வில் இட ஒதுக்கீடு உரிமை பெற்றவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தாலும் பொதுப் போட்டி இடங்களில் இடங்களை பெற முடியாதவாறு பொதுப்போட்டி இடங்கள் அனைத்தும் முன்னேறிய வகுப்பினருக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இது இட ஒதுக்கீட்டை தலைகீழாக மாற்றியுள்ளது.
இதரப் பிற்படுத்தப் பட்டோருக்கு எத்தனை விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட் டுள்ளன என்பதும் மாணவர் சேர்க்கை தகவல் குறிப்பேட்டில் குறிப்பிடப்படவில்லை.
டில்லி எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்திற்கான மாணவர் சேர்க்கை நுழை வுத் தேர்வில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப் பெண் ணை 50 விழுக்காடு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவை யனைத்தும் சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளாகும்.
இக் குறைபாடுகளை உடனடியாகக் களைந்து புதிதாக விண்ணப்பப் படிவங்களையும் மாணவர் சேர்க்கை தகவல் குறிப்பேட்டையும் வழங்க வேண்டுமென என மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறையை வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்துடன் இணைந்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் 30.9.08 செவ்வாய் மாலை 5.00 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
ஆர்ப்பாட்டத்திற்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தலைமை தாங்குகிறார். உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் துவக்கி வைக்கி றார்.ம.தி.மு.க இணை பொதுச் செயலாளர் மல்லை சத்தியா,பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன்,தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜி.பி.சாரதி, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ். குமார்,தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு,பி.எஸ்.பி தலைவர் சட்டமன்ற உறுப்பினர், செல்வப் பெருந்தகை, டாக்டர்.நா.எழிலன்,மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் இரா.திருமலை,துணைச் செயலாளர்கள் கே.ரவிக்குமார்,பி.ஸ்டாலின் மகேந்திர சிங் ,இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநில துணைச் செயலாளர் மஞ்சுளா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகினர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் இரா.முத்தரசன் நிறைவுரையாற்றுகிறார்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை (செவ்வாயன்று) சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச் செயலாளர்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்