DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :30.06.08
பெறுநர்
உயர்திரு செயலாளர் அவர்கள்,
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை,
தமிழ்நாடு அரசு.
மரியாதைக்குரிய அய்யா,
29.6.08 அன்று மாலை திருநெல்வேலியில் எங்கள் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.அவற்றை நிறைவேற்றிட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுகிறேன்.
டாக்டர்கள் மருத்துவத் துறை ஊழியர்களின் உயிர்-உடைமைகளை பாதுகாக்க தகுந்த சட்டம் கொண்டு வரவேண்டும்.
தமிழக அரசு டாக்டர்களின் ஊதியத்தை உடனடியாகக் கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல் உயர்த்தி வழங்க வேண்டும்.
ஒப்பந்த அடிப் படையில் பணியில் சேர்ந்து தற்பொழுது காலமுறை ஊதியம் பெற்று வரும் டாக்டர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன் முறை வழங்கி அரசு ஒதுக் கீட்டின் கீழ் முது நிலை மருத்துவக் கல்வியில் வரும் கல்வியாண்டில் சேரவழிகாண வேண்டும்
தற்காலிகமாக பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு உடனடியாக டி.என்.பி.எஸ்.சி சிறப்பு தேர்வு நடத்தி பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ,அரசு மருத்துவ மனைகளிலும் தடுப் பூசிகளை மருத்துவர்கள் மேற்பார்வையில் போடும் திட்டத்தை தமி ழக அரசு நடைமுறைப்படுத்துவது வரவேற்கத்தக்கது.இத்திட்டத்தை வெற்றி கரமாக செயல்படுத்திட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி திட்டத்திற்காக கூடுதலாக தனியாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும். தடுப்பூசிக்காக தாய்மார்களையும்-குழந்தைகளையும் அலைய விடாமல் தடுத்திட துணை சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசிகளைப் டாக்டர்கள் மேற்பார் வையில் போடவேண்டும்.15 ஆயிரம் மக்கள் தொ கைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக்க வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ஆம்புலன்சுகள் வழங்க வேண்டும் . ஆம்புலன்ஸ் சேவையை தனியார் அமைப்பிடம் விடுவதை கைவிட வேண் டும். வட்டாரத்திற்கு இரண்டு மொபைல் கிளினிக்குகள் வீதம் தொடங் கவேண்டும்.இதற்கு தனியாக மருத்துவர்களையும் இதர ஊழியர்களையும் நியமிக்கவேண்டும். தடுப்பூசிகள் நச்சுத்தன்மை வாய்ந்த மாசு கலப்பதை தடுத்திட சிங்கிள் டோஸ் குப்பிகளை வழங்க வேண்டும்.
குன்னூர்,கிண்டி, கசவ்லி ஆகிய இடங்களில் உள்ள நோய் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்களை மீண்டும் செயல்படச் செய்ய மத்திய அரசை கேட்டுக்கொள்ள வேண்டும்.
மருத்துவக் கல்வியில் பிரேக் சிஸ்டத்தை நீக்க வேண்டும்.
முது நிலை மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும்.
மிக்க நன்றி.
இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச் செயலாளர்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச் செயலாளர்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்