DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :31.07.08
இதழ்-செய்தி
டாக்டர்கள் சங்கத்தின் கோரிக்கை மாநாடு. வரும் ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறுகிறது. ஆர்.நல்லகண்ணு-டி.கே.ரெங்கராஜன் பங்கேற்பு.
இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர் .ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.
பணிநிரந்தரம் பெற்றுள்ள ஒப்பந்த டாக்டர்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் கல்வியாண்டில் முதுநிலை மருத்துவக் கல்வி பயிலும் வகையில் அவர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணிநிரந்தரம் வழங்கவேண்டும்.தற்காலிக அடிப்படையில் அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றிவரும் டாக்டர்களுக்கு டி.என்.பி.எஸ்.ஸி சிறப்புத் தேர்வு நடத்தி பணிநிரந்தரம் வழங்க வேண்டும்.மருத்துவக் கல்வியில் உள்ள பிரேக் சிஸ்டத்தை ரத்து செய்ய வேண்டும்.மருத்துவர்கள் ,பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்.நோய்தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்களில் உற்பத்தியை மீண்டும் தொடங்கவேண்டும்.கட்டாய சேவை என்ற பெயரில் மருத்துவர்களின் நிரந்தர வேலைவாய்ப்பை பறிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் வரும் ஞாயிறு (3.08.08) அன்று மாலை2.30 மணிக்கு கோரிக்கை மாநாடு சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை மியூசியம் எதிரில் உள்ள ஜீவன ஜோதி அசெம்பிளி ஹாலில் நடைபெற உள்ளது.மாநிலத்தலைவர் டாக்டர் த.அறம் தலைமை தாங்குகிறார்.டாக்டர்கள் என்.சுதர்சன், டி.சரவணன், ஏ.இர் ஷாத் அலி, ஐ. ஜித்தேந்தர் முன்னிலை வகிக்கின்றனர்.டாக்டர் இல.இளஞ் செழியன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப் பினர் டி. கே. ரங்கராஜன் எம்.பி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்ற னர்.டாக்டர்கள் ஜீ. ஆர்.ரவீந்திரநாத்,கே.முத்துகுமார்,டி.மோகன்,ஏ.ஆர்.சாந்தி, பி.துரை,ஆர்.சுந்தர்,டி.சிவக்குமரன்,எம்.அருள்நம்பி,சி.சுகன்யா,டி.ரங்கசாமி உள்ளிட்டோர் கோரிக்கை விளக்க உரையாற்றுகின்றனர்.தமிழகம் முழுவதிலு மிருந்து ஏராளமான டாக்டர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். டாக்டர்.எம்.கமல்ராஜ் நன்றியுரையாற்றுகிறார்.
இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச் செயலாளர்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச் செயலாளர்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்