Doctors' Association for Social Equality

"Study! Service!! Struggle!!!"

All Messages

Search Our Site

DOCTORS’ ASSOCIATION FOR SOCIAL EQUALITY (Regd No:322/2004)
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் # 41-Chavady street,Pallavaram,Chennai -43. Fax:044 22643562 Mobile:99406 64343. Email:daseindia@gmail.com Web Site:www.daseindia.org
--------------------------------------------------------------------------------- இதழ்ச் செய்தி. தேதி : 5.0210
மூன்றரை ஆண்டு மருத்துவப் படிப்புக் குறித்து மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் முன்னுக்குப்பின் முரணாகப் பேசி மக்களை ஏமாற்றுகிறார்.கிராமப்புற மக்களையும்-மாணவர்களையும் இரண்டாந்தரக் குடிமக்களாக் கும் மூன்றரை ஆண்டு மருத்துவப்படிப்புத் திட்டத்தை கைவிடாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்.இதுகுறித்து
சமூக சமத்துவத்திற் கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திர நாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.
கிராமப்புறங்களில் போதிய மருத்துவர்கள் இல்லை,கிராமப்புறங்களுக்கு மருத்துவர்கள் செல்ல மறுக்கிறார்கள்,என்ற காரணத்தைக் கூறி 'கிராமப்புற மருத்துவர்கள்' என்ற புதிய மூன்றரை ஆண்டு
மருத்துவப் படிப்பை தொடங்கிட மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை முயன்றது.இது கிராமப்புற மக்களை இரண்டாம்தரக் குடிமக்களாக்கிவிடும்.இப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களின்
எதிர்காலமும் கேள்விக் குறியாகிவிடும்.மருத்துவக் கல்வியின் தரமும் தாழ்ந்துவிடும்.இதனால் ஏற்படும் தவறான சிகிச்சைகளினால் கிராமப்புற மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக
நேரிடும்.எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர்களின் வேலைவாய்ப்பையும் பறித்து விடும் என்பதால் நாடு முழுவதும் டாக்டர்கள் சங்கங்களும்,மருத்துவ மாணவர்களும் இத்திட்டத்தை எதிர்த்தனர்.
இந்நிலையில் ,கிராமப்புறங்களுக்கு மருத்துவர்கள் செல்ல மறுக்கிறார்கள் என்ற வழக்கமான வாதத்தை அமைச்சர் குலாம் நபி ஆசாத் நாசூக்காக விட்டுவிட்டார்.மூன்றரை ஆண்டு மருத்துவப்
படிப்பை மேற்கொள்வோரை கிராமப்புற டாக்டர்கள் எனக் கூறாமல்... மருத்துவர்களை ஏமாற்றும், திருப்திபடுத்தும் உள்நோக்கத்தோடு கிராமப்புற நலப்பணியாளர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி
அழைக்கத் துவங்கியுள்ளார்.இது ஒரு ஏமாற்று வேலை.டாக்டர் என்ற சொல்லுக்குப் பதிலாக வேறு சொற்களை பயன்படுத்தினாலும் அரசின் நோக்கம் தெளிவாகவே உள்ளது.அதாவது கிராமப்புற
மருத்துவமனைகளில் குறைந்த ஊதியத்தில் வெள்ளைக் கோட்டுப் போட்ட நபர்கள் டாக்டர்கள் என்ற போர்வையில் இருந்தால் போதும் என்பதுதான். அமைச்சரின் ஏமாற்று வித்தையால் மருத்துவ
மாணவர்கள்,மருத்துவர்கள் குழம்பிவிட மாட்டார்கள்
ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் துணை சுகாதாரா நிலையங்களிலும் மருத் துவர்களை நியமிக்க வேண்டும் என முதன் முதலில் ஒரு மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.குலாம் நபி ஆசாத்தின இந்த
அறிவிப்பு வரவேற்கத்தக்கது.பாராட்டத்தக்கது. ஆனால்,இந்நிலையங்களில் மூன்றரை ஆண்டு மருத்துவப்படிப்பு படித்தவர்களை நியமிக்க வேண்டும் என்பது சரியல்ல. படித்து விட்டு வேலையின்றி
இருக்கும் எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர்களை நிரந்தர அடிப்படையில் இந்நிலையங்களில் நியமிக்க வேண்டும்.இதன் மூலம் கிராம்ப்புற மக்களுக்கும் தரமான சிகிச்சை கிடைக்கும்.வேலையின்றி
இருக்கும் எம்.பி.பி.எஸ் படித்த மருத்து வர்க ளுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே,மூன்றரை ஆண்டு மருத்துவப்படிப்புத் திட்டத்தை திணிப்பதற்குப் பதிலாக இளநிலை-முது நிலை மருத்துவர்களை அதிகமாக உருவாக்க வேண்டும்.அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளின்
இடங்களையும் 50 முதல்150 விழுக்காடு வரை அதிகரிக்க வேண்டும். இந்தியா முழுவதும் மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.மூன் றரை ஆண்டு மருத்துவப்படிப்புத் திட்டத்தை
கைவிடாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்க விரும்புகிறது. இப்படிக்கு,
(டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்)

0 comments

Post a Comment

Flash News - Exam Alerts

Get DASE Announcements and News by SMS

Our Site is seen from

Regular Readers