Doctors participating in the educational finance aid giving function on 9.11.08 morning at Tuticorin.
DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :09.11.08
இதழ்-செய்தி
அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் கட்டணங்களை அரசே ஏற்க வேண்டும். தூத்துக்குடியில் ஏழை மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள். இது குறித்து இச்சங்கத்தின் சார்பில் விடப்பட்டுள்ள இதழ்ச் செய்தி.
மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் ஏழைமாணவர்களுக்கு நிதிவழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் டாக்டர் எம்.சுரேஷ்குமார் தலைமையில் ஹோட்டல் சித்திராவில் 9.11.08 காலை நடைபெற்றது..டாக்டர் க.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் எஸ். உமா எம்.டி மாணவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர்.ஜி.ஆர்.ரவீந் திரநாத் ,மாநிலத் தலைவர் டாக்டர் த.அறம் மாநில செயலாளர் டாக்டர் பி.துரை, நெல்லை மாவட்டச் செயலாளர் டாக்டர் என்.பசுபதி,பொருளாளர் டாக்டர் சண்முகராஜா, துணைத்தலைவர் அருள்ராஜன் டாக்டர்கள் கருப்பசாமி ,முருகதாசன் ,சந்தானமாரி, முத்துசாமி,சிவப்பிரகாஷ், உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.நெல்லை மாவட்ட துணைச் செயலாளர் டாக்டர் பர்வதராணி சார்பில் ஆண்டுதோறும் ஒரு ஏழை மாணவருக்கான கட்டணங்கள் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. .டாக்டர்கீதாராணி நன்றி நவின்றார்.கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- அகில இந்திய நுழைவுத்தேர்வு மூலம் மருத்தவக்கல்வியை வேறு மாநிலங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கான கட்டணங்களை தமிழக அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்கிறது.
- இத்திட்டத்தை விரிவு படுத்தி இதரபிற்படுத்தப்பட்டோருக்கும், முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளுக்கும்,அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களக்கும் உதவ வேண்டும்.
- பணிநிரந்தரம் பெற்றுள்ள ஒப்பந்த டாக்டர்களும், தற்காலிக அடிப்படையில் அரசு மருத்துவ மனைகளில் நீலகிரி மாவட்டத்தில் பணி யாற்றி வரும் டாக்டர்களுக்கும், முது நிலை மருத்துவப் படிப்பிற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
- இதற்கேற்ப டி.என்.பி. எஸ்.சி மூலம் பணியமர்த்தப்படுபவர்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத் துவம் பயிலலாம் என்ற விதி முறையை நீக்கவேண்டும்.
- தற்காலிக அடிப்படையில் அரசு மருத்துவ மனைகளில் பணி யாற்றி வரும் டாக்டர்களுக்கும்,பல்டாக்டர்களுக்கும் டி.என்.பி.எஸ்.ஸி சிறப்புத் தேர் வு நடத்தி பணியில் சேர்ந்த நாள்முதல் பணி வரன்முறை வழங்க வேண்டும்.
- தாய்-சேய் நல வாழ்வுத்திட்டம்,காசநோய் தடுப்புத்திட்டம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகம் போன்றவற்றில் தற்காலிக அடிப்படையில் பணி யாற்றி வரும் டாக்டர்களுக்கும் பணிநிரந்தரம் வழங்க வேண்டும்.
- மருத்துவர்கள் ,பயிற்சி மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு மாணவர்களின் ஊதியத்தை கர்நாடகாவிற்கு இணையாக உயர்த்த வேண்டும்.
- அரியலூரில் டாக்டர்களை தாக்கிய நபர்களை உடன் கைது செய்யவேண்டும்.
- இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும்.மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படும் இலங்கைக்கு எதிராக ஐ.நா.சபை உரியநடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச் செயலாளர்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(டாக்டர் த.அறம்)
தலைவர் ,டி.ஏ.எஸ்.ஈ