DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :28.09.08
இதழ்-செய்தி
உரிய வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்க்க கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும். சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க கன்னியாகுமரிமாவட்டப் பொதுக்குழு வேண்டுகோள்.
இது குறித்து இச்சங்கத்தின் சார்பில் விடப்பட்டுள்ள இதழ்ச்செய்தி.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க கன்னியாகுமரி மாவட்டப்
பொதுக்குழுக் கூட்டம் டாக்டர் சிவக்குமார் தலைமையில் 2.11.08 மாலை
நாகர்கோயில் ஹோட்டல் விஜயதாவில் நடைபெற்றது.டாக்டர் கே. ராஜேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். ,மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத் ,மாநிலத் தலைவர் டாக்டர் த.அறம் மாநில செயலாளர் டாக்டர் துரை, டாக்டர்கள் எஸ். ராஜேஷ்குமார், ஆறுமுகம், பிரதீப்,சாம்,முகைதீன்,ஜான்சிமெர்லா,பிங்கிள் கிரேஸ்,எட்வின் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்..டாக்டர் முருகேஷ்நன்றி நவின்றார்.கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
போதிய மருத்துவ வசதிகளும்,சிறப்பு மருத்துவர்களும் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்க்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதால்தாய்மார்களின் பேறுகால இறப்புவிகிதமும், சிசு மரணவிகிதமும் அதிகரித்துவருகிறது. எனவே,கட்டாயப்படுத்தும் போக்கை கைவிட வேண்டும்.
பணிநிரந்தரம் பெற்றுள்ள ஒப்பந்த டாக்டர்களும், தற்காலிக அடிப்படையில் அரசுமருத்துவ மனைகளில் நீலகிரி மாவட்டத்தில் பணி யாற்றி வரும் டாக்டர்களுக்கும்,முது நிலை மருத்துவப் படிப்பிற்கு வாளிணிப்பளிக்க வேண்டும். இதற்கேற்படி.என்.பி.எஸ்.சி மூலம் பணியமர்த்தப்படுபவர்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில்முதுநிலை மருத்துவம் பயிலலாம் என்ற விதி முறையை நீக்கவேண்டும்.
தற்காலிக அடிப்படையில் அரசு மருத்துவ மனைகளில் பணி யாற்றி வரும்
டாக்டர்களுக்கும்,பல்டாக்டர்களுக்கும் டி.என்.பி.எஸ்.ஸி சிறப்புத் தேர் வு நடத்திபணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை வழங்க வேண்டும். தாய்-சேய் நலவாழ்வுத்திட்டம்,காசநோய் தடுப்புத்திட்டம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகம்போன்றவற்றில் தற்காலிக அடிப்படையில் பணி யாற்றி வரும் டாக் டர்களுக்கும்பணிநிரந்தரம் வழங்க வேண்டும்.
மருத்துவர்கள் ,பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களின் ஊதியத்தைகர்நாடகாவிற்கு இணையாக உயர்த்த வேண்டும். புதியஓய்வூ தியத் திட்டத்தைகைவிடவேண்டும்.
இலங்கைத் தமிழர்கள் மீதான இலங்கை ரானுவத்தின் தாக்குதல்கள் கடந்த சிலமாதங்களாக அதிகரித்துள்ளது.இதனால் அப்பாவி தமிழர்கள் ஏராளமாகக் கொல்லப்படுகின்றனர். மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. போதிய படுக்கைவசதியின்றி நோயாளிகள் மருத்துவமனை வளாகங்களில் தரையில் படுத்திடும அவலநிலை உள்ளது. லேரியா,வாந்தி-பேதி,விஷக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள்
அதிகரித்துவருவதாக செளிணிதிகள் வெளிவருகின்றன. பாம்புகடியால் ஏராளமானோர்இறந்துள்ளனர்.தொற்றுநோய்களும்,மழைக் காலத்தால் ஏற்படும் நோய்களும் அதிகரித்துள்ளது. ஏராளமான குழந்தைகளும் பேறுகால தாய்மார்களும் சொல்லொணாதுயரத்திற்கு ஆளாகியுள்ளனர். குழந்தைகளுக்கும் பேறுகால தாய்மார்களுக்கும்தடுப்பூசிகளைக் கூட போடமுடியவில்லை. போதிய மருந்துப்பொருட்களும்,மருத்துவ
வசதிகளும் இன்றி போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அகதிகளாக உள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவ வசதிகளின்றி அவதிப்படும் தமிழர்களுக்கு சமூக சமத்துவத்திற்கான
டாக்டர்கஷீமீ சங்கத்தைச் சேர்ந்த மருத்துவக்குழு இலங்கையில் போரினால்
பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று மருத்துவ உதவி வழங்கிட மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத்தர தமிழக முதல்வர் முன்வரவேண்டும் என
வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே
இந்தியமருத்துவர்களை அனுமதிக்க முடியாது என கூறி இருப்பது
கண்டிக்கத்தக்கது. மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா பாதுகாப்புசபை முன்வரவேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
அரியலூரில் டாக்டர்களை தாக்கிய நபர்களை உடன் கைது செய்யவேண்டும்
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச் செயலாளர்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்