GOVERNMENT ALL DOCTORS’ ASSOCIATION-TAMILNADU
(Regd No:390/2009)
அனைத்து டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு,
மற்றும்
DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :24.10.10
இதழ்-செய்தி
இப்படிக்கு,
(டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்) (டாக்டர்.டி.மோகன்)
பொதுச்செயலாளர், பொதுச்செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம். அரசு அனைத்து டாக்டர்கள்
சங்கம், தமிழ்நாடு,
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய அளவில் ஒரே நுழைவுத் தேர்வுநடத்தும் திட்டத்தை கைவிடவேண்டும். டாக்டர்களின் கருத்தரங்கம் வேண்டுகோள்.
இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் அரசு அனைத்து டாக்டர்கள் சங்கம்,தமிழ்நாடு,ஆகியவற்றின் சார்பில்
வெளியிடப்பட்டும் பத்திரிகை செய்தி.
முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க் கைக்கு அகில இந்திய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்படும் ,அதன் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசு கூறிவருகிறது.இது மாநில அரசுகளின் உரிமைகளுக்கும்,கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் எதிரானது.பல்வேறு ஊழல்களுக்கும் ,முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும்.கிராமப்புறங்களில் பணியாற்றும் டாக்டர்களை பாதிக்கும்.எனவே மத்திய அரசின் இத்திட் டத்தை தடுத்து நிறுத்திட தமிழக அரசு அனைத்து நடவ டிக்கைகளை யும் எடுக்கவேண்டும்.முதுநிலை மருத்துவ கல்வியில் எக்சிட் தேர்வு முறையை கொண்டுவரும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் அரசு அனைத்து டாக்டர்கள் சங்கம்,தமிழ்நாடு, ஆகிய வற்றின் சார்பில் 24.10.10 ஞாயிறு அன்று பிற்பகல் 3.00 மணிக்கு அரசு அனைத்து டாக்டர்கள் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் த.அறம் தலைமையில் சென்னை எழும்பூர், 107-பாந்தியன் சாலை மியூசியம் எதிரில் உள்ள இக்சா மைய மாநாட்டு அரங்கில் கருத்தரங்கம் நடை பெற்றது.டாக்டர்கள் மதர்ஷா, வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தனர்
டாக்டர் இளமாறன் வரவேற்புரையாற்றினார்.அரசு அனைத்து டாக் டர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர்.தி.மோகன் கருத் தரங்கை துவக்கிவைத்தார். டாக்டர்கள் சாந்தி,சுந்தர், அருள்நம்பி, எஸ்.முஜிபூர்ரஹ்மான்,பி.தர்மலிங்கம்,ஜவஹர்,துரை,ஆனந்த் உள்ளிட் டோர் கருத்துரை வழங்கினர்.சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர்.ஜி.ஆர். ரவீந்திரநாத் நிறைவு ரையாற்றினார்.டாக்டர் சீனிவாசன் நன்றி நவின்றார்.
கருத்தரங்கில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களில் 50 விழுக்காட்டை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்குவதை கைவிட்டு,அனைத்து இடங்களை யும் தமிழக மருத்துவர்களுக்கே வழங்க வேண்டும்.
ஏ.ஐ.எம்.எஸ், ஜிப்மர், பி.ஜி.ஐ. சண்டிகர் உள்ளிட்ட அனைத்து மத்திய மருத்துவ நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கும் ஒரே நுழைவுத் தேர்வை நடத்திட வேண்டும்.
தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் ஆன்லைன் முறையை நடைமுறைப்படுத்தவேண்டும். கவுன்சிலிங்கின் பொழுது காத்திருப்போர் பட்டியலை துறைவாரியாக உருவாக்குவதை கைவிட்டு பொதுவானதாக வைக்கவேண்டும்.
முதுநிலை மருத்துவம் பயில்வதற்கான வயது வரம்பை ரத்து செய்ய வேண்டும்.
ஏற்கனவே ஒரு டிப்ளமோ படித்தவர்கள் வேறொரு துறையில் மீண்டும் டிப்ளமோ படிக்கவிரும்பினால் அதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
பி.சி முஸ்லீம் இடஒதுக்கீட்டில் நிரம்பாத காலி இடம் இருந்தால் அதை பி.சி யினருக்கு மட்டுமே வழங்குவதோடு,எஸ்.சி அருந்ததியர் இடஒதுக் கீட்டில் நிரம்பாத காலி இடம் இருந்தால் அதை எஸ்.சி யினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பதை மாணவர் சேர்க் கைக்கான குறிப்பேட்டிலேயே இடம் பெறச் செய்ய வேண்டும்.
முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கின் பொ ழுது வீடியோ,ஆடியோ பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலிங் நேர்மையாக நடைபெறுகிறதா என கண்காணிக்க அனைத் து டாக்டர்கள் சங்க பிரதிநிதிகளை கவுன்சிலிங் மையத்தில் அனுமதிக் க வேண்டும்.நுழைவுத் தேர்வின் விடைத்தாள் நகலை தேர்வு எழுது வோருக்கு வழங்குவதோடு தேர்வு எழுதிய அன்றே சரியான விடை கள் அடங்கிய ஆன்சர்கீயை இணைய தளத்தில் வெளியிடவேண்டும்.
சித்தா,மற்றும் இதர முறை மருத்துவர்கள் நவீன அறிவியல் மருந்து களை பரிந்துரைக்கலாம் என்ற உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும்.சித்தா,மற்றும் இதர முறை மருத்துவர்கள் நவீன மருத் துவர்கள் மேற்கொள்ளும் அறுவைசிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தீர்ப்பு மக்கள் நலனுக்கு எதிரானது, இதை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்.
அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் முதுநிலை சட்ட மருத்துவம் பயின்ற மருத்துவர் ஒருவரை கட்டாயம் பணிநிய மனம் செய்யவேண்டும்.
பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களின் புதிய மருந்துகளை சோ தித்துப்பார்க்கும் பரிசோதனை முயல்களாக இந்திய மக்கள் மாற்றப் படுவது கவலையளிக்கிறது.மக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் மருந்துகளை மக்களிடம் சோதித்துப்பார்க்கும் பரிசோதனை முறைக ளை ஒழுங்கு படுத்திட உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற் கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.