Search Our Site
LETTER TO THE SELECTION COMMITEE,HEALTH SECRETARY,DPH TO ALLOW THE SERVICE QUOTA TO ExCMCs,& DOCTORS WORKING IN NILGRIS Dt
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790,
22642845
தொலைநகல்: 044 - 22643562
கைபேசி : 99406 64343, 94441 83776
________________________________________________________________________________
தேதி :20.10.08
பெறுநர்
திருமிகு செயலாளர் அவர்கள்,
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைப் பிரிவு,
தமிழ்நாடு.
மரியாதைக்குரிய அய்யா,
தற்காலிகமாக பணியில் சேர்ந்து டி.என்.பி.எஸ்.சி
சிறப்புத் தேர்வு மூலம் பணிநிரந்தரம் பெற்றுள்ள டாக்டர்களுக்கும்,
தற்காலிகமாக பணியில் தற்பொழுது நீலகிரி மாவட்டத்தில்
பணியாற்றிவரும் டாக்டர்களுக்கும் , அரசு ஒதுக்கீட்டின் கீழ்
முது நிலை மருத்துவக் கல்வி பயில அனுமதி வழங்கிட
வேண்டுகிறோம்.இதற்கு ஏதுவாக டி.என்.பி.எஸ்.சி மூலம்
பணியமர்த்தப் படுபவர்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை
மருத்துவம் பயிலலாம் என்ற விதியை மாணவர் சேர்க்கை
குறிப்பேட்டிலிருந்து நீக்கவேண்டுகிறோம்.தற்காலிக முறையிலோ
அல்லது வேறு எந்த அடிப்படையிலோ அரசு மருத்துவ
மனைகளில் பணியாற்றினாலும் அரசு குறிப்பிட்டுள்ள காலம்
வரை பணியாற்றியிருந்தால் அந்த டாக்டர்களுக்கு அரசு
ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக் கல்வி பயில வாய்ப்பளிக்க
வேண்டுகிறோம். மேற்படிப்பை முடித்ததும் தொடர்ந்து அரசு
மருத்துமனைகளில் அரசு குறிப்பிடும் காலம்வரை
பணிபுரிவோம் என்ற உறுதி மொழியை தகுந்த ஆவணங்கள் மூலம்
இதற்கேற்ப பெற்றுக்கொள்ளலாம். எனவே,உடனடியாக தமிழக
அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறோம்.
50 வயதை அடைந்த டாக்டர்கள் முதுநிலை மருத்துவக் கல்வி
பயில முடியாது என்ற புது விதியையும் மாணவர் சேர்க்கை
குறிப்பேட்டிலிருந்து நீக்க வேண்டுகிறோம்.
பணிநிரந்தரம் பெற்றுள்ள ஒப்பந்த டாக்டர்களுக்கு பணியில்
சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை வழங்க வேண்டுகிறோம்.
மிக்க நன்றி
இப்படிக்கு,
(டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்)
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790,
22642845
தொலைநகல்: 044 - 22643562
கைபேசி : 99406 64343, 94441 83776
________________________________________________________________________________
தேதி :20.10.08
பெறுநர்
திருமிகு செயலாளர் அவர்கள்,
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை,
தமிழ்நாடு.
மரியாதைக்குரிய அய்யா,
தற்காலிகமாக பணியில் சேர்ந்து டி.என்.பி.எஸ்.சி
சிறப்புத் தேர்வு மூலம் பணிநிரந்தரம் பெற்றுள்ள டாக்டர்களுக்கும்,
தற்காலிகமாக பணியில் ]தற்பொழுது நீலகிரி மாவட்டத்தில்
பணியாற்றிவரும் டாக்டர்களுக்கும் , அரசு ஒதுக்கீட்டின் கீழ்
முது நிலை மருத்துவக் கல்வி பயில அனுமதி வழங்கிட
வேண்டுகிறோம். இதற்கு ஏதுவாக டி.என்.பி.எஸ்.சி மூலம்
பணியமர்த்தப் படுபவர்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை
மருத்துவம் பயிலலாம் என்ற விதியை மாணவர் சேர்க்கை
குறிப்பேட்டிலிருந்து நீக்கவேண்டுகிறோம்.தற்காலிக
முறையிலோ அல்லது வேறு எந்த அடிப்படையிலோ அரசு
மருத்துவமனைகளில் பணியாற்றினாலும் அரசு குறிப்பிட்டுள்ள
காலம் வரை பணியாற்றியிருந்தால் அந்த டாக்டர்களுக்கு அரசு
ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக் கல்வி பயில வாய்ப்பளிக்க
வேண்டுகிறோம். மேற்படிப்பை முடித்ததும் தொடர்ந்து
அரசுமருத்துமனைகளில் அரசு குறிப்பிடும் காலம்வரை பணிபுரிவோம்
என்ற உறுதி மொழியை தகுந்த ஆவணங்கள் மூலம் இதற்கேற்ப
பெற்றுக்கொள்ளலாம். எனவே,உடனடியாக தமிழக அரசு
இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறோம்.
50 வயதை அடைந்த டாக்டர்கள் முதுநிலை மருத்துவக்கல்வி
பயில முடியாது என்ற புது விதியையும் மாணவர் சேர்க்கை
குறிப்பேட்டிலிருந்து நீக்க வேண்டுகிறோம்.
பணிநிரந்தரம் பெற்றுள்ள ஒப்பந்த டாக்டர்களுக்கு பணியில்
சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறை வழங்க வேண்டுகிறோம்.
மிக்க நன்றி
இப்படிக்கு,
(டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்)
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790,
22642845
தொலைநகல்: 044 - 22643562
கைபேசி : 99406 64343, 94441 83776
________________________________________________________________________________
தேதி :20.10.08
பெறுநர்
திருமிகு இயக்குனர் அவர்கள்,
பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை,
தமிழ்நாடு.
மரியாதைக்குரிய அய்யா,
தற்காலிகமாக பணியில் சேர்ந்து டி.என்.பி.எஸ்.சி
சிறப்புத் தேர்வு மூலம் பணிநிரந்தரம் பெற்றுள்ள டாக்டர்களுக்கும்,
தற்காலிகமாக பணியில் தற்பொழுது நீலகிரி மாவட்டத்தில்
பணியாற்றிவரும் டாக்டர்களுக்கும் , அரசு ஒதுக்கீட்டின் கீழ்
முதுநிலை மருத்துவக் கல்வி பயில அனுமதி வழங்கிட
வேண்டுகிறோம். இதற்கு ஏதுவாக டி.என்.பி.எஸ்.சி மூலம்
பணியமர்த்தப் படுபவர்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில்
முதுநிலை மருத்துவம் பயிலலாம் என்ற விதியை மாணவர்
சேர்க்கை குறிப்பேட்டிலிருந்து நீக்கவேண்டுகிறோம்.
தற்காலிக முறையிலோ அல்லது வேறு எந்த அடிப்படையிலோ
அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றினாலும் அரசு
குறிப்பிட்டுள்ள காலம் வரை பணியாற்றியிருந்தால் அந்த
டாக்டர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக் கல்வி
பயில வாய்ப்பளிக்க வேண்டுகிறோம். மேற்படிப்பை முடித்ததும்
தொடர்ந்து அரசுமருத்துமனைகளில் அரசு குறிப்பிடும்
காலம்வரை பணிபுரிவோம் என்ற உறுதி மொழியை தகுந்த
ஆவணங்கள் மூலம் இதற்கேற்ப பெற்றுக்கொள்ளலாம்.
எனவே,உடனடியாக தமிழக அரசு இதுகுறித்து உரிய
நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறோம்.
50 வயதை அடைந்த டாக்டர்கள் முதுநிலை மருத்துவக் கல்வி
பயில முடி யாது என்ற புது விதியையும் மாணவர் சேர்க்கை
குறிப்பேட்டிலிருந்து நீக்க வேண்டுகிறோம்.
பணிநிரந்தரம் பெற்றுள்ள ஒப்பந்த டாக்டர்களுக்கு பணியில்
சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறை வழங்க வேண்டுகிறோம்.
மிக்க நன்றி
இப்படிக்கு,
(டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்)
CONDOLENSE MESSAGE FOR THE DEMISE OF SHRI.V.P.SINGH,WHICH IS A BIG LOSS IN THE FIGHT FOR SOCIAL JUSTICE
தேதி :28.11.08
இதழ்-செய்தி
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மரணம்-சமூக நீதிக்கு பேரிழப்பு.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மரணம் அடைந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.சமூக நீதிக்காகவும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்டோர் உரிமைகளுக்காகவும் அவர் ஆற்றியபணி சிறப்பானது.மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்பில் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 27 விழுகாடு இட ஒதுக்கீட்டை வழங்கிட நடவடிக்கை எடுத்ததினால் ஆட்சியை இழந்த போராளி.மதச்சார்பின்மை,ஜனநாயகம் காத்திட உறுதியுடன் செயல்பட்டவர்.அவரது மறைவு இந்தியாவிற்கு பேரிழப்பாகும்.சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தனது அஞ்சலி யையும்,ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.
இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச் செயலாளர்
முது நிலை மருத்துவக்கல்வி வாய்ப்புக் கோரி சென்னையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1500 க்கும் மேற்பட்ட டாக்டர்கள் ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ 8000 தொகுப்பூதியத்தில் மாரச் 2005 முதல் பணியாற்றி வந்தனர்.சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாக அவர்கள் தி.மு.க அரசால் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர்.மூன்று ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிமுடித்த மருத்துவர்கள் அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயிலலாம் என அரசு விதிமுறை உள்ளது.பணிநிரந்தரம் பெற்றுள்ள ஒப்பந்த டாக்டர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை வழங்கப்பட வில்லை. இதனால் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய காலம் அரசுப்பணியாக எடுத்துக் கொள்ளப்பட வில்லை.எனவே 3 ஆண்டுகள் அரசுப் பணியை முடித்திருந்த போதிலும் இவர்களால் அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயில முடியவில்லை.இது அம் மருத்துவர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மருத்துவர்கள் அரசுப்பணியில் விரும்பி சேர்வதில்லை .நீண்ட காலமாக ஏராளமான பணியிடங்கள் காலியாக இருந்தன.இக்காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் அரசு நீலகிரி மாவட்டத்தில் பணிபுரியும் டாக்டர்களுக்கு பல சலுகைகளை வழங்கியது.அம்மாவட்டத்தில் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் சேவை முடித்திருந்தாலே அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயிலாம் என்றும்,நுழைவுத் தேர்வில் கூடுதலாக ஆண்டொன்றிற்கு இரண்டு மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது.இதனால் நீலகிரி மாவட்டத்தில் காலிப்பணி இடங்கள் அனைத்தும் நிரம்பின. ஆனால் இம் மருத்து வர்கள் அனைவரும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட் டுள்ளனர் .அவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி சிறப்புத்தேர்வு வைத்து இதுவரை பணிவரன்முறை வழங்கப்படவில்லை.எனவே 2 ஆண்டு பணி முடித்த நீலகிரி மாவட்ட டாக்டர்களும் முதுநிலை மருத்துவக்கல்வி பயில முடியாத நிலை உள்ளது.
பணிநிரந்தரம் பெற்றுள்ள ஒப்பந்த டாக்டர்களும் , நீலகிரி மாவட்ட தற்காலிக டாக்டர்களும் அரசு ஒதுக்கீட்டில் வரும் கல்வியாண்டில் முது நிலை மருத்துவக்கல்வி பயில வாய்ப்பளித்திட வேண்டும்.அதற்கேற்ற வகையில் டி.என்.பி.எஸ்.சி மூலம் பணியமர்த்தப்பட்டவர்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயிலலாம் என்ற விதியை மாணவர் சேர்க்கை குறிப்பேட்டிலிருந்து நீக்கவேண்டும். சீமான் மற்றும் பீமான் மருத்துவ மையங்களில் பணிபுரியும் முது நிலை மருத்துவர்கள் உட்பட அனைத்து மருத்துவர்களுக்கும் டி.என்.பி.எஸ்.சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி உடனடியாக பணிநிரந்தரம் வழங்கிடவேண்டும் .மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் 23.11.08 ஞாயிறு காலை சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கப் பொருளாளர் டாக்டர் தி.மோகன் தலைமை தாங்கினார். சி.பி.ஐ மாநில செயலாளர் தா.பாண்டியன் துவக்கிவைத்தார். டாக்டர்கள் கு.முத்துக்குமார், பி.துரை,ஆர்.சுந்தர்,அருள்நம்பி,சிவக்குமரன்,.திருவாரூர் வி.எஸ்.டி.சந்திரசேகர்,தர்மபுரி சரவணன்,புதுகை முஜிபூர் ரஹ்மான், கமல்ராஜ்.இளஞ்செழியன்,இர்ஷாத், குணாளன், நடராஜன்,வாணி,வசுமதி உள்ளிட்டோர் கோரிக்கை விளக்க உரையாற் றினர்.பொது ச்செயலாளர் டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத் முடித்து வைத்தார்.இதில் ஏராளமான டாக் டர்கள் பங்கேற்றனர்.
முது நிலை மருத்துவக்கல்வி வாய்ப்புக் கோரி சென்னையில் வரும் ஞாயிறு அன்று டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.
பணிநிரந்தரம் பெற்றுள்ள ஒப்பந்த டாக்டர்களுக்கும், நீலகிரி மாவட்டத்தில் தற்காலிகமாக பணியாற்றிவரும் டாக்டர்களுக்கும் அரசு ஒதுக்கீட்டில் வரும் கல்வியாண்டில் முது நிலை மருத்துவக்கல்வி பயில வாய்ப்பளித்திட வலியுறுத்தியும், அதற்கேற்ப டி.என்.பி.எஸ்.சி மூலம் பணியமர்த்தப்பட்டவர்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயிலலாம் என்ற விதியை மாணவர் சேர்க்கை குறிப்பேட்டிலிருந்து நீக்கவேண்டும் என வலியுறுத்தியும், சீமான் மற்றும் பீமான் மையங்களில் பணிபுரியும் முது நிலை மருத்துவர்கள் உட்பட அனைத்து மருத்துவர்களுக்கும் டி.என்.பி.எஸ்.சி சிறப்புத் தேர்வு மூலம் உடனடியாக பணிநிரந்தரம் வழங்கிடக்கோரியும் , சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் வரும் 23.11.08 ஞாயிறு காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது..
சங்கத் தலைவர் டாக்டர் டி.அறம் தலைமை தாங்குகிறார். சி.பி.ஐ மாநில செயலாளர் தா.பாண்டியன் துவக்கிவைக்கிறார், டாக்டர்கள் கு.முத்துக்குமார், தி.மோகன்,பி.துரை,ஆர்.சுந்தர்,அருள்நம்பி,சிவக்குமரன்,.திருவாரூர் சந்திரசேகர்,தர்மபுரி சரவணன் உள்ளிட்டோர் கோரிக்கை விளக்க உரையாற்றுகின்றனர்.பொதுச்செயலாளர் டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத் முடித்து வைக்கிறார்.இதில் ஏராளமான டாக்டர்கள் பங்கேற்பர்.