Press release to send the Medicines given by DASE for the srilankan Tamils and to send the volunteering Doctors for the Srilankan Tamils welfare
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322ஃ2004)
41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776 ______________________________________________________
இதழ்ச் செய்தி தேதி :29.01.09
மனித உரிமைகளுக்கு எதிராக அப்பாவி தமிழர்கள் மீது ராணுவத் தாக்குதல்கள்.
இலங்கை அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம்.
போரினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மருத்துவ வசதி வழங்கிடுக.அனுமதி வழங்கினால் தமிழக மருத்துவர்கள் போரினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மருத்துவ சிகிச்சை வழங்கத் தயார்.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.
முல்லைத்தீவுப் பகுதிகளில் இலங்கைத் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.இதனால் அப்பாவி தமிழர்கள் ஏராளமாகக் கொல்லப் படுகின்றனர். மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.போதிய மருந்துப் பொருட்களும்,மருத்துவ வசதிகளும் இன்றி போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் அவதிப்படு கின்றனர்.ஏராளமான குழந்தைகளும் பேறுகால தாய்மார்களும் சொல்லொ ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டப் பகுதி களில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ,எல்லைகளற்ற டாக்டர்கள் அமைப்பை முழுமையாக பயன்படுத்தவேண்டும்.அனுமதி வழங்கினால் தமிழக மருத்துவர்கள் போரினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மருத்துவ சிகிச்சை வழங்கத் தயார்.
மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படும் இலங்கை அரசை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும்.ஐ.நா.சபை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போர்நிறுத்தத்தை நடைமுறைப் படுத்தவும், இனப்பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் அமைதி வழியில் அரசியல் தீர்வு காணவும் இந்திய அரசும் சர்வதேச நாடுகளும் இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்காக திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவர்களால் சேகரிக்கப்பட்டு 10.11.08 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் தமிழக அரசால் இலங்கைத் தமிழர்களுக்கு இதுவரை அனுப்பப்படாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீணாகிக்கொண் டிருக்கிறது.அதை உடனடியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பிவைக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு
(டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்)
பொதுசெயலாளர்,டி.ஏ.எஸ்.ஈ