DOCTORS’ ASSOCIATION FOR SOCIAL EQUALITY
[Regd. No. 322/2004]
# 41, Chavadi Street, Pallavaram, Chennai – 600 043 Tamil Nadu.
Phone: 044 – 2264 3561, 2264 2790, Fax: 044 – 2264 3562, Cell: 94441 83776, 9940664343
Email: daseindia@yahoo.com, dasetn@yahoo.com, daseindia@gmail.com, www.daseindia.org
[Regd. No. 322/2004]
# 41, Chavadi Street, Pallavaram, Chennai – 600 043 Tamil Nadu.
Phone: 044 – 2264 3561, 2264 2790, Fax: 044 – 2264 3562, Cell: 94441 83776, 9940664343
Email: daseindia@yahoo.com, dasetn@yahoo.com, daseindia@gmail.com, www.daseindia.org
Date: 22/11/2007
பத்திரிகை செய்தி
அரசு மருத்துவமனைகளையே தனியாருக்கு வழங்க திட்டம் வகுத்துள்ளவர்கள்
சேவையைப் பற்றி பேசுவது கேலிகூத்தாகும். கட்டாய சேவை என்ற பெயரில் மருத்துவர்களின் நிரந்தர வேலை வாய்ப்பை பறிக்கும் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் கட்டாய கட்டணம் வசூல் செய்வதை ரத்து செய்ய தயாரா? சமூக நீதிக்கு குரல் கொடுப்பவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்பு காலத்தை உயர்த்தி சமூக நீதிக்கு சவக்குழி வெட்டலாமா? பாட்டாளி மக்கள் கட்சி தெளிவுப்படுத்த வேண்டும்.
இது குறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் விடுத்துள்ள பத்திரிகை செய்தி.
பட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் தர்மபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் டாக்டர் ஆர். செந்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு மக்களையும்இ மருத்துவ மாணவர்களையும் குழப்ப பார்க்கிறார். இது கண்டிக்கத்தக்கது.
கட்டாய சேவை என்பது ஒன்றும் புதிதல்ல என்று கூறி மத்திய அரசு கொண்டு வரும் கட்டாய சேவை திட்டத்தை தவறான முறையில் நியாயப்படுத்த முயலுகிறார். மருத்துவர்கள் முதுநிலை படிப்புக்கு முன்பும் - பின்பும் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணி புரிய வேண்டும் என்ற திட்டம் மகாராஷ்டிரம்இ கோவாஇ ஒரிசா போன்ற சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. மக்கள் நலனை அடிப்படையாக கொண்டு இம்மாநில அரசுகள் அவ்வாறு செய்கின்றன. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு முதுநிலை மருத்துவக் கல்வியில் 50 விழுக்காடு இடங்களை ஒவ்வொரு மாநிலமும் வழங்கும் நிலை தற்பொழுது உள்ளது. தனது மாநில முதுநிலை மருத்துவ இடங்களை பிற மாநிலத்தவர்கள் எடுத்துவிடாமல் தடுப்பதற்காகவும்இ தனது மாநில மக்களின் நலன்களுக்காகவும் அம்மாநில அரசுகள் இவ்வாறு கட்டாயச் சேவையை நடைமுறைப்படுத்துகின்றன. தமிழகத்தில் இவ்வாறு இல்லாததால் முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களை பிற மாநிலத்தவர்களிடம் நாம் இழந்து வருகிறோம்.
அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யக் கோரி பல போராட்டங்கள் நடத்தியும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்து மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வந்தும் உச்சநீதி மன்றம் அதை செல்லாது என்று கூறிவிட்;டது. இந்நிலையில் மாநில நலனைக் கருதி மகாராஷ்டிரம் முதுநிலை மருத்துவக் கல்வியில் கட்டாய சேவையை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதனால் படிப்பில் கால நீடிப்பு ஏற்படுவது இல்லை. எனவே இத்திட்டத்தை மத்திய அரசின் திட்டத்தோடு ஒப்பிட முடியாது.
டாக்டர் செந்தில் குறிப்பிட்டுள்ளது போல மருத்துவ மாணவர்களை கட்டாய சேவைக்கு அனுப்பும் திட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைமுறையில் இல்லை. அவர் தவறான தகவலை வெளியிட்டுள்ளார்.
கேரளாஇ மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் எம்.பி.பி.எஸ் முடித்த டாக்டர்களுக்கு கட்டாய சேவை தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்;கு காரணம் மாநில அரசுகள் அல்ல மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை கொண்டு வந்துள்ள தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் தான். இந்த திட்டத்தின் மூலம் அனைத்து மாநிலங்களும் டாக்டர்களை தற்காலிக அடிப்படையிலும்இ ஒப்பந்த அடிப்படையிலும்இ கட்டாய அடிப்படையிலும்இ பணி அமர்த்திக் கொள்ளவேண்டுமென நிர்பந்தப்படுத்துகிறது மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை. இதற்கு வசதியாக ஒவ்வொரு மாநிலத்திலும் பயனாளிகள் நலச்சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது. எனவேஇ தனது தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் மூலமாக மாநில அரசுகளை கட்டாய சேவையை நடைமுறைப்படுத்த வற்புறுத்திவிட்டு மாநில அரசுகளை உதாரணம் காண்பிப்பது மோசடித்தனமாகும். அதுவும் கேரளா போன்ற மாநிலங்களை உதாரணமாக காட்டுவது உள்நோக்கம் கொண்டது.
ஒரு மாநில அரசு கட்டாய சேவை திட்டத்தை கொண்டு வருவதற்கும் மத்திய அரசு கொண்டு வருவதற்கும் வேறுபாடு உள்ளது. பொது சுகாதாரம் மாநிலப் பட்டியிலில் உள்ளது. இது மாநில அரசின் உரிமைச் சார்ந்தது. தனது மாநிலத்திற்கு கட்டாய சேவை தேவையில்லை எனில் அதை ரத்து செய்து கொள்ள முடியும். எல்லா மாநிலங்களும் இதை நிறைவேற்ற வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் தற்பொழுது மத்திய அரசு கொண்டு வரும் திட்டத்தின் மூலம் மருத்துவ படிப்பு காலமே 6½ ஆண்டுகளாக உயர்த்தப்படுவதால் எல்லா மாநிலங்களுமே இதை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனால் ஏழை - எளிய மாணவர்களும்இ தாழ்த்தப்பட்டஇ பிற்படுத்தப்பட்ட மாணவர்களும்இ பெண்களும் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இது தான் சமூக நீதியா?
தற்பொழுது மத்திய அரசு கொண்டு வர உள்ள கட்டாய சேவை திட்டத்தை எல்லா மாநில மருத்துவ மாணவர்களும் ஏற்றுக் கொண்டுவிட்டதாகவும் தமிழகத்தில் மட்டும் ஒரு சிறு பகுதியினர் எதிர்ப்;பதாகவும் கூறுவது தவறானதாகும். எல்லா மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களும் இதை எதிர்க்கின்றனர். சென்ற வாரம் கட்டாய சேவை திட்டத்தை எதிர்;த்து மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர்களும்இ மருத்துவ மாணவர்களும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். 21-11-2007 அன்று மகாராஷ்டிராவிற்கு டாக்டர் சாம்பசிவராவ் தலைமையிலான குழு வருகை தந்த பொழுது 42 மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒட்டுமொத்தமாக அத்திட்டத்தை எதிர்த்து மனு அளித்துள்ளனர். அடுத்த கட்டமாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும் நேற்று அறிவித்துள்ளனர். டெல்லியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் போராட தயாராகி வருகின்றனர். நவம்பர் 27 வரை பல்வேறு மாநிலங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வு முடிந்த பிறகு அம்மாணவர்களும் போராட்ட களத்தில் இறங்குவர். எனவே உண்மைக்கு புறம்பாக பா.ம.க. தகவல்களை வெளியிடுவது சரியல்ல.
மேலும் பா.ம.க வாதப்படி தமிழகத்தில் மட்டுமே போராட்டம் நடந்தாலும் அதில் என்ன தவறு உள்ளது? மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்க வேண்டும் என்ற பிரச்சனை எழுந்தபொழுது தமிழகத்தில் மட்டும் தான் மருத்துவ மாணவர்கள் அதிக அளவில் போராடினார்கள். அதற்காக 27 விழுக்காடு இடஒதுக்கீடு கோரிக்கை தவறானதா? அதைக் கைவிட்டுவிடலாமா? பா.ம.க. பதில் சொல்ல வேண்டும்.
கட்டாய கிராமப்புற சேவை என்ற பெயரில் 4 மாதங்கள் மட்டுமே மருத்துவ மாணவர்கள் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேவை செய்வார்கள். மீதி உள்ள 8 மாதங்களில் நகர்புறங்களில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளில் 4 மாதங்களும்இ தாலுகா மருத்துவமனைகளில் 4 மாதங்களும் சேவை செய்வார்கள். 8 மாதங்கள் நகர்புற மருத்துவமனைகளில் சேவை செய்யும்பொழுது இது எப்படி கிராமப்புற சேவையாகும்? எனவேஇ கிராமபுறம் என்ற கவர்ச்சிகரமான சொல்லை பயன்படுத்தி மோசடி செய்யக்கூடாது. தாலுக்கா மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் டாக்டர்கள் பணியாற்ற தயங்கமாட்டார்கள். எனவே அம்மருத்துவமனைகளிலும் கட்டாய சேவையை புகுத்துவது ஏன்? 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் மருத்துவர்களை கொண்டு நிரந்தரப் பணியிடங்களை ஒழித்துகட்டுவது தானே இதன் நோக்கம்? இல்லை என்று மறுக்க முடியுமா? கட்டாய சேவையில் ஈடுபடும் டாக்டர்களுக்கு ரூ.8 ஆயிரம் வழங்குவதாக கூறுவது தான் தகுந்த ஊதியமா? இது உழைப்பு சுரண்டல் அல்லவா?
தமிழ்நாடுஇ மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் அரசு பணிக்கு டாக்டர்கள்யிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தியா முழுவதும் நிரந்தப் பணி வழங்கக் கோரி டாக்டர்கள் போராடி வருகிறார்கள். பா.ம.க புள்ளி விவரப்படி 15500க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வேலை வாய்ப்பின்றி இருக்கும்பொழுது அவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்காமல் ஏன் இந்த கட்டாய சேவையை திணிக்க வேண்டும்?
கிராமப்புறத்தில் பணி புரியும் டாக்டர்களுக்கு கூடுதல் ஊதியம்இ ஊக்க தொகைஇ முதுநிலை மருத்துவக் கல்வியில் தனி இடஒதுக்கீடுஇ கூடுதல் மதிப்பெண்இ பதவி உயர்வில் முன்னுரிமைஇ போக்குவரத்து வசதிஇ வீட்டு வசதி முதலியவை வழங்கிட வேண்டும். இதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சிக்காமல் கட்டாய கிராமப்புற சேவையை திணிப்பது ஏன்?
சுயமாக சிந்தித்து திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை உலக வங்கியின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் என பிடிவாதம் பிடிக்கிறது. இந்நிலையில் சுயமாக போராடும் மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை தூண்டிவிட்டு நடைபெறும் போராட்டம் என்பது நகைப்புக்குரியது.
எனவேஇ இத்திட்டத்தை கைவிட்டுவிட்டு சமூக நீதியையும்இ இளம் டாக்டர்களின் வேலை வாய்ப்பை பாதுகாக்க முன் வர வேண்டும். அரசு மருத்துவமனைகளுக்கு வருகை தரும் நோயாளிகளிடம் தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தின் மூலம் சிகிச்சைகளுக்கும்இ பரிசோதனைகளுக்கும் கட்டாய கட்டணம் வசூல் செய்வதை கைவிட வேண்டும்.
இப்படிக்குஇ
டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத்
பொதுச் செயலாளர் DASE
டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத்
பொதுச் செயலாளர் DASE