தேதி: 04-02-2007
இதழ்ச் செய்தி
அரசு மருத்துவமனைகளில் கட்டண வார்டுகளை ஏற்படுத்துவது ஏழை நோயாளிகளை பாதிக்கும்.
மருத்துவ சேவையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.
தமிழக அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.
தமிழக அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.
இது குறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத், மாநில பொருளாளர் டாக்டர் டி. மோகன், தஞ்சை மாவட்டச் செயலாளர் டாக்டர் ஜெ.சுதாகர், தஞ்சை மாவட்ட தலைவர் டாக்டர் நியூட்டன் ஆகியோர் தஞ்சை பத்திரிகையாளர் சந்திப்பில் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.
தனியாக புதிதாக கட்டிட வசதிகளையும் மருத்தவர்களையும், இதர ஊழியர்களையும் நியமிக்காமல் அரசு மருத்துவமனைகளில் கட்டண வார்டுகளை உருவாக்குவது ஏழை நோயாளிகளின் வாய்ப்புகளை பறிப்பதாக அமையும். எனவே இம்முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களின் சேவைகளை தனியார் மயமாக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள நோயாளிகள் நலச்சங்களை செயல்பட அனுமதிக்கக் கூடாது. அரசு மருத்துவமனைகளின் சேவைகளை தனியார் மயமாக்குவதை பொது மக்கள் நலனில் அக்கறையின்றி அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சில நிர்வாகிகள் சுயலாப நோக்குடன் ஆதரிப்பது வருந்தத்தக்கது. அரசு மருத்துவர்களின் ஊதியத்தை மத்திய அரசுக்கு இணையாக உயர்த்த வேண்டும், காலியாக உள்ள அனைத்து டீன் பதவிகளும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும், சிறுநீரக மோசடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், தவறு செய்த மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டும், வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நிதியை வழங்குவதில் உள்ள முறைகேடுகளை கலைய வேண்டும் இம்முகாம்களுக்கு தனியாக மருத்துவர்களை MCI-யில் பதிவு மூப்பு அடிப்படையில் நிரந்தரமாக நியமிக்க வேண்டும்.
முதுநிலை மருத்துவக் கல்வியில் 8 இடங்கள் அல்லது அதற்கும் குறைவான இடங்கள் உள்ள படிப்புகளில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தமிழக அரச நடவடிக்கை எடுக்காததது வருந்தத்தக்கது.
முதுநிலை மருத்துவர்கள் நுழைவுத்தேர்வு முடிந்த உடனேயே தேர்வு எழுதியவற்கு விடைத்தாளின் கார்பன் நகலை வழங்க வேண்டும், அன்று மாலையே இணையதளத்தில் சரியான விடைகளை வெளியிட வேண்டும். சேவை மதிப்பெண்ணையும்இ நுழைத்தேர்வு மதிப்பெண்ணையும் தனித்தனியே குறிப்பிட்டு, மொத்த மதிப்பெண்களையும் வெளியிட வேண்டும். “ஆன்லைன் கவுன்சிலிங்” வசதியை ஏற்படுத்துவதோடு, காலியாக உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மீண்டும் மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டப் பின்னரே கவுன்சிலிங்-யை தொடங்க வேண்டும்
பயிற்சி மருத்துவர்கள் பட்டமேற்படிப்பு மாணவர்களின் பயிற்சி கால ஊதியத்தை உயர்த்த வேண்டும். முதலாமாண்டு மருத்துவக் கல்வியில் உள்ள பிரேக் சிஸ்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழில் தேர்வு எழுதவும், வாய்மொழி தேர்வில் தமிழில் பதில் அளிக்கவும் அனுமதி வழங்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் அரசு சேவையை முடித்த உடனேயே அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக் கல்வி பயில வாய்ப்பளிக்க வேண்டும். தற்காலிகமாக பணியாற்றிய டாக்டர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணி மூப்பு வழங்க வேண்டும். பஞ்சாயத்து யூனியன் மருத்துவமனைகளில் பணியாற்றி அரசு மருத்துவர்களாகியுள்ள டாக்டர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணி மூப்பு வழங்கிட வேண்டும். மதுரை - சென்னை மாநகராட்சி தற்காலிக டாக்டர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கவேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.
மருத்துவத் துறையை தனியார் மயமாக்கும் நோக்குடனும், கார்ப்ரேட் மருத்துவனைகள், பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள், ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனிகள், மருத்துவ உபகரணங்கள் தயார் செய்யும் நிறுவனங்களின் நலன்களுக்கேற்ப உலக வர்த்தக நிறுவனத்தின் நிர்பந்தத்தால் 2002ல் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்திய மக்கள் நலவாழ்வு கொள்கையில் நமது நாட்டு மக்களின் நலன்களுக்கேற்ப மாற்றங்களை கொண்டு வர வேண்டும். மருந்து பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும், DNBீ படிப்புகளிலும் மத்திய அரசு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். கட்டாய ஓராண்டு கிராமப்புற சேவை என்ற பெயரில் புதிய வேலைவாய்ப்புகளை ஒழித்துக் கட்டக்கூடாது. டாக்டர்களுக்கு சேவை வரி விதிக்கக் கூடாது. இன்றைய தேவைக்கேற்ப புதிய அரசியல் சட்டம் உருவாக்குப்படுவது வரவேற்கத்தக்கது. அனைவருக்கும் கல்வி - வேலை - மருத்துவ சேவை - நலவாழ்வு என்பது புதிய அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.
இப்படிக்கு
(டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத்)
பொதுச் செயலாளர்.
(டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத்)
பொதுச் செயலாளர்.